Smart Tenkasi

விசுவாசமும் நம்பிக்கையும்

விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும் இவை இரண்டும் இரண்டாகவே உள்ளது. 

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்

விசுவாசமானது காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது

– (எபிரேயர் 11:1)

ஆபிரகாம் என்கிற தேவ மனிதன், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழநிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான் என பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. அது ஆபிரகாமுக்கு மட்டுமல்ல நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஆபிரகாமுக்கு அது நீதியாக எண்ணப்பட்டதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அது நீதியாக எண்ணப்படும் (ரோமர் 4:21-24.)

காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்

காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்

காணப்படுகிற அநித்தியமானவைகளை ஒருவன் நம்பவேண்டியதில்லை, ஒருவன் தான் காண்கிறவைகளை நம்பவேண்டியது என்ன? நாம் காணப்படாதவைகளை நம்பியிருக்கிறோம். காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். காணப்படாதவைகள் தேவனுடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகளே (ரோமர் 1:20)

தேவன் ஆவியாயிருக்கிறார். அவரை மனிதன் மாமிச கண்களினாலே காணமுடியாது. மனுகுலத்தின் மீட்புக்காய் மாமிசத்தில் வெளிப்பட்ட இயேசுவில் காணப்படாதவைகளாகிய தேவத்துவமும் நித்திய வல்லமையும் அடங்கியிருந்தது. அவர் மூலமாய் அந்த தேவத்துவமும், நித்திய வல்லமையும் வெளிப்பட்டது. அநேகர் அந்த மகத்துவத்தை இயேசு கிறிஸ்துவில் கண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இந்த இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாய் மனுக்குலத்துக்கு பாவமன்னிப்பாகிய மீட்பை உண்டுபண்ணிவிட்டு அவர் உயிரோடு எழும்பி பரத்திற்கு ஏறிச் சென்றார். இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி அவரிடத்தில் தேவன் தமது பலத்த சத்துவத்தின் வல்லமையைக் காண்பித்தார். இப்பொழுது விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்தில் பரிசுத்தாவி மூலம் தம்முடைய மகத்துவம் உள்ள வல்லமையைக் காண்பிக்கிறார். விசுவாசிக்கிறவர்களாகிய ஒவ்வொருவரிடத்திலும் காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்று அறிய ஒவ்வொருவருடைய மனக்கண்களையும் தேவன் பிரகாசமுள்ளதாக்குவாராக (எபேசியர் 1:19).

மேலும் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள் உண்டாக்கப் பட்டவைகளினாலே அதாவது சிருஷ்டிக்கப்பட்டவைகளினாலே உலகம் உண்டானது முதற்கொண்டு தெளிவாய் காணப்படுகிறது. இப்படியிருக்க மனிதன் தேவனை விசுவாசியாமலும், நம்பாமலுமிருந்து பூமி எப்படி உண்டானது என்றும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எப்படி? எப்பொழுது? தோன்றினது என்றும் மனித மூளையினால் ஆராய்ச்சி செய்தும் முடிவு கண்டுபிடிக்க முடியாமல் காணப்படுகிறார்கள். தங்கள் ஆராய்ச்சிக்கு எட்டினக் காரியங்களை வைத்து இன்னும் நம்பிக்கைக் கொண்டு தேடுகிறார்கள். முடிவில் காணப்படுகிறவைகளாகிய உண்டாக்கப்பட்ட இவைகளினாலே காணப்படாத தேவனையும், அவருடைய நித்திய வல்லமையையும், அவருடைய தேவத்துவத்தையும், கண்டுகொள்ள இவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்படட்டும்.

பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு. அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம், ஆயினும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை எனப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. சிலர் விசுவாசியமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? (ரோமர் 3:3).

விசுவாசத்தினாலே நாம் எதை அறிந்திருக்கிறோம்?

விசுவாசத்தினாலே உலகங்கள், தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம் (எபி 11:3). இங்கே ‘தேவனுடைய வார்த்தை’ என்று கூறப்பட்டுள்ளதன் நியமம் என்னவென்றால் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவான் 1:1). தேவனையும் வார்த்தையையும் பிரிக்கமுடியாது. தேவன் சர்வவல்லவர், அவர் வார்த்தையும் சர்வவல்லமையுள்ளது. அந்த வார்த்தைதான் மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து. அவர் கிருபையும் சத்தியமும் உள்ளவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம், அது தேவனுடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாயிருந்தது.

தெய்வபக்தியின் இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளதாயிருக்கும். அந்த மகாமேன்மையான தெய்வபக்தியின் இரகசியம் என்னவென்றால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார் (1 தீமோ 3:16). தேவன் மாம்சத்தில் மனுக்குலத்தின் மீட்புக்கென்று வெளிப் பட்டபோது அவருக்கு இயேசு எனறு பெயரிடப்பட்டது. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பது.

இந்த இயேசு கிறிஸ்து அதரிசனமான (காணக்கூடாத) தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேருமானவர். ஏனென்றால்அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலேகத்திலுள்ளவைகளும், பூலோகத்தில் உள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது (கொலோ 1:15-17). அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் நீங்கள் அன்பு கூறுகிறீர்கள் இப்பொழுது அவரை தரிசியாமலுமிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாய் இருக்கிற சந்தோஷமுடையவர்களாய் களிகூர்ந்து உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைகிறீர்கள் (1 பேதுரு 1:8,9).

விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருக்கும்படி, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார் என பரிசுத்த வேதம் கூறுகிறது (1பேதுரு 1:21). உயிர்த்தெழுந்தவராய் பரம்ஏறிச்சென்ற இயேசு திரும்பவும் வரப்போகிறார். இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மரணத்தையும், அடக்கத்தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிறவர்கள் மனந்திரும்பி தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்படுகிறார்கள் (ரோமர் 6:3-5). இவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் முத்திரைப்போடப்படுகிறார்கள். இவர்கள் ஆவியின் முதற்பலனானவர்கள், இவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்கு காத்திருந்து வருகிறவர்கள் தவிக்கிறவர்கள். இதைக்குறித்து ரோமர் 8:24,25ல் அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடும்போது அந்த நம்பிக்iயினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார். ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுதென்ன? என்று சொல்லப்பட்டிருக்கிறபடி நாம் காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்கு பொறுமையோடே காத்திருப்போம் என்கிறார். மேலும் காண்கிறவைகளை அல்ல காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கிவடும் லேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது (2 கொரி 4:17).

பிரியமானவர்களே! பூர்வக்காலங்களில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்றும் மனதார அறியாமலிருக்கிறீர்களா? அப்படியே இப்பொழுது இருக்கிற வானங்களும், பூமியும், அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு, அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது 2பேதுரு 3:5-7. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை சோதனை யினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார் என பரிசுத்த வேதம் கூறுகிறது.

பூமியிலே மனிதன் உண்டாக்கப்பட்டு இரண்டாயிரமாவது ஆண்டிலே மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு, தாம் பூமிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது, நான் சிருஷ்டித்த மனுஷனை பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு எல்லாவற்றையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். ஆனாலும் நோவா என்ற மனிதன் தன்காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய் இருந்தான்;; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அதாவது தேவனோடு ஐக்கியமாயிருந்தான். நோவவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ஆதி 6:5-9.

தேவன் பூமியை பார்த்தார்; அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது: அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது நான் அவர்களைப் பூமியோடுகூட அழித்துப்போடுவேன் என்றார் ஆதி 6:10-13. தேவன் பூமியின்மேல் நியாயத்தீர்ப்பை அனுப்ப ஜலப்பெருக்கமாகிய ஜலப்பிரலளயத்தை உண்டுபண்ணினார் நாற்பது நாள் இரவும் பகலும் மழை பெய்தது. பூமியின் மதகுகள் திறந்து தண்ணீர் பெருக்கெடுத்து, ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பதுநாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே நோவாவுக்கு கர்த்தர் சொன்னபடி அவன் கீழ்ப்படிந்து பேழையைக் கட்டியிருந்தான். நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஜோடு ஜோடாக மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், போன்றயாவற்றையும் பேழையிலே போகச் செய்து அதினாலே காப்பாற்றினார். இந்த பேழைதான் நோவா கட்டின முதல் கப்பல்.

எதற்காக இவர்களைக் காப்பாற்றினார்?

மனிதனிடத்தில் தேவன் எதிர்பார்த்தபடி மனிதன் தேவன்மேல் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வைத்து நோவாவைப்போல நீதிமான்களும், உத்தமர்களும், தேவனோடு ஐக்கியமானவர்களாய் இருக்கக்கூடிய ஒரு சந்ததியை உருவாக்கவே.

தேவன் நூற்றைம்பது நாளுக்குப்பின் பூமியின்மேல் ஜலம் வற்றிப்போகப் பண்ணினார். பேழையாகிய கப்பல் பூமியிலே அரராத் என்னும் மலையிலே இறங்கினது. இது இன்னும் சரித்திரசான்றான ஒன்றாகவே இருக்கிறது. பேழையிலிருந்து நோவாவோடு யாவற்றையும் வெளிப்படச் செய்து அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து பூமியின்மேல் பலுகிபெருகக்கடவது என்றார். நோவா பேழையிலிருந்து வெளிப்பட்டதும் கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி பலிபீடத்தின்மேல் தகனபலியிட்டான். தன் உத்தமத்தையும், தேவனோடு உள்ள ஐக்கியத்தையும் விட்டுவிடாமல் தேவனை தொழுதுகொள்ளும் வண்ணமாய் இப்படிச் செய்தான். தேவன் அதை சுகந்த வாசனையாக ஏற்றுக்கொண்டார். கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுவேன் என தாவீது என்ற அரசன் சங் 117:12,13ல் கூறியிருப்பதைப் பாருங்கள்.

முதல் மனிதனாகிய ஆதாமின் கீழ்படியாமையினாலே பூமி அவன் நிமித்தம் சபிக்கப்பட்டிருந்தது. பூமி உன்நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதன் பலனைப் புசிப்பாய், உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் நீ மண்னாய் இருக்கிறாய்: மண்ணுக்குத் திரும்புவாய் என்று தேவன் சொல்லியிருந்தார் ஆதி 3:16,17. இப்படி முதல் மனிதனாகிய ஆதாமுக்கு உண்டான சாபம் சந்ததிக்கும் தொடர்ந்தது அந்த சாபமானது நோவா காலம்வரைக்கும் மனுக்குலத்தின்மேல் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இப்படி மனுக்குலத்தின் பாவத்தினிமித்தமாயும், சாபத்தினிமித்தமாயும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னான நோவா காலத்தில் ஜலப்பிரளயமாகிய நியாயத்தீர்ப்பைக் கட்டளையிட்டார்.

இப்பொழுது நோவவைப் பார்த்து தேவன் சொன்னது: இனி நான் மனிதனின் நிமித்தம் பூமியை சபிப்பதில்லை. மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாய் இருக்கிறது. நான் ஜலப்பிரளயத்தால் பூமியை நியாயந்தீர்த்ததுபோல இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை பூமி உள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும், உஷ்ணமும், கோடைக்காலமும், மாரிக்காலமும், பகலும் இரவும் ஓய்வதில்லை என்று தன் உள்ளத்தில் சொன்ன ஆண்டவர் நோவாவையும் குமாரரையும் ஆசீர்வதித்து நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார். ஆப்படியே இன்றளவும் மனுகுலம் பெருகிக் கொண்டிருக்கிறது.

மேலும் தேவன் நோவாவை நோக்கி: பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று உடன்படிக்கையை ஏற்படுத்தினார். உடன்படிக்கைக்கு அடையானமாக மேகத்தில் வில்லை வைத்தார். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது அந்த வில் மேகத்தில் தோன்றும்: அப்பொழுது இனி ஜலமானது பிரளயமாய் பெருகாதபடிக்கு அந்த வில் மேகத்தில் தோன்றும்போது என் உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன் என்று தேவன் சொன்னார். இன்றளவும் மழைக்காலத்தில் மேகத்தில் வானவில்லை காணமுடிகிறது.

நோவாவின் காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அவன் சந்ததியார் தங்கள் யோசனையின்படியே நடந்து அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியேச் செய்து ஆண்டவரை விட்டு விலகி போய்விட்டார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமாகிவிட்டது. மனிதனுடைய இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும் கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும் (தீவிரவாத செயல்கள்) கபடும், காமவிகாரமும் (அதினாலே பாலியல் வன்கொடுமைகளும்), வன்கண்ணும், பெருமையும், மதிகேடுமான பொல்லாதவைகளாகிய இலைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்துகிறது.

இப்படித் தங்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிற மனுக்குலத்தை நேசித்து ஏகதேசம் இரண்டாயிரத்து பதினாறு ஆண்டுகளுக்கு முன் தேவன் மனிதசாயலாக இயேசு என்ற பெயரில் உலகத்தில் தோன்றினார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றி இரண்டாயித்து பதினாறு ஆண்டுகளாகிறது. இதைத்தான் கி.பி 2016 என்று சொல்லுகிறோம். மனிதனை நேசித்த இயேசு பாவியை விரும்புகிறவராயும் பாவத்தை வெறுக்கிறவராயும் இருந்து மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார். மனந்திரும்பாவிட்டால் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றும் சொன்னார்.

இன்றைக்கும் மனந்திரும்புதல் கூறப்பட்டுவருகிறது. மனந்திரும்புதல் மதமாற்றம் அல்ல. மதமாற்றம் மனந்திரும்புதலை தராது. மதமாற்றம் மனிதனை பொல்லாத வழியிலிருந்து திருப்பி தேவனோடு ஐக்கியப்படுத்தாது. மனந்திரும்புதலே மனிதன் பாவத்திலிருந்து திரும்பவும் பாவத்தை வெறுக்கவும் செய்து நீதிமான்களாயும், உத்தமர்களாயும் மாற்றி தேவனோடு ஐக்கியங்கொள்ளச் செய்கிறது. இப்படிப்பட்டவர்களால் மதக்கலவரங்களோ? தீவிரவாதசெயல்களோ? இனக்கலவரங்களோ உண்டாவதில்லை.

மேலும் மனந்திரும்பினோம் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் உண்மையானவர்களும் அல்ல, கள்ளத்தனமாய் மனந்திரும்பினார்கள் என்று தீர்க்கத்தரிசி சொல்லியிருக்கிறபடி மனந்திரும்பினோம் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பாதவர்கள். இவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.

நோவா காலமுதல் நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் மனுக்குலத்தை ஆண்டவர் நேசித்து வருகிறார். ஆனால் அவர்களோ தங்களை கெடுத்து அநேக உபாயத்தந்திரங்களை உண்டுபண்ணிக் கொள்கிறார்கள். மதங்கள் என்ற போர்வைக்குள் மறைந்து நல்லவர்களைப்போலக் காட்டிக்கொண்டு தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொள்கிறார்கள். அன்று முதல் இன்று வரையிலும் மனிதனை நேசிக்கிற ஆண்டவர் சிட்சையாகிய தண்டனையின் மூலமாய் தம் அன்பை வெளிப்படுத்துகிறார். தகப்பன் தன் பிள்ளையை சாகும்படி சிட்சிப்பதில்லை நல்லப்பிள்ளையாய் வளரவேண்டுமென்று அவனுடைய பிற்கால நன்மையைக் கருதி சிட்சிக்கிறார். சரீரத்தின் தகப்பன்மார்கள் சிட்சிக்கும்போது அவர்களுக்கு அஞ்சி நடக்கிறவர்களாய் இருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக அதாவது நித்திய ஜீவனைப் பெறும்படியாக தேவனுக்கு வெகு அதிகமாக அடங்கிநடக்க வேண்டுமல்லவா. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்கு கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராய் இராமல் வேசிப்பிள்ளைகளாய் இருப்பீர்களே எனப் பரிசுத்த வேதம் கூறுகிறது.

தேவன் நம்மை தமது பரிசுத்தத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்திற்காகவே சிட்சிக்கிறார் எபி 12:6-10. பிள்ளைகளே பெற்றோர் உங்களைச் சிட்சிக்கும்போது அவர்களை வெறுத்து தூரமாய் போய்விடாதீர்கள். அவர்கள் உங்கள்மேல் கொண்டுள்ள அன்பை உணர்ந்து கொள்ளுங்கள். அப்படியே மனிதனும் தண்டனையாகிய சிட்சையின் மூலமாய் ஆண்டவர் நேசிக்கிறார் என்பதை உணர்ந்து மனந்திரும்ப வேண்டுமே தவிர அவரைவிட்டு தூரம்போகக் கூடாது. ஆவரை அண்டிக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள் என பரிசுத்த வேதம் கூறுகிறது.

அற்ப காலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று நோவா காலத்துக்குப்பின் ஏகதேசம் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்குப்பின் ஏசாயா தீர்க்கத்தரிசியைக் கொண்டு ஆண்டவர் சொன்னார். இது எனக்கு நோவா காலத்தில் உண்டான வெள்ளம்போலிருக்கும். நோவா காலத்தில் உண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டு வருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல உன்மேல் நான் கோபம் கொள்ளுவதில்லை என்றும் உன்னை நான் கடிந்துகொள்ளுவதில்லை என்றும் ஆணையிட்டார் – ஏசாயா 54:8,9. எவ்வளவுதான் அன்பை தேவன் வெளிப்படுத்தினாலும் மனிதன் தேவனுடைய அன்பை உணர்ந்து கொள்ளவில்லை. என்றாலும் மனிதன்மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை வெளிப்படுத்தும்படி தேவன் தமது ஒரேபேரான குமாரனை அனுப்பினார். தேவன் தமமுடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு இயேசுவை உலகத்தில் வெளிப்படச் செய்து தேவன் தமது அன்பின் மிகுதியைக் காண்பித்தார். உலகத்தை அழிக்கும்படிக்கு தன் குமாரனை அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அனுப்பினார். அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் யோவா 3:16,17. மனிதனை சிருஷ்டித்து ஏகதேசம் நாலாயிரம் ஆண்டு இறுதியில் இயேசு இந்த உலகத்தில் மனிதனாய் கன்னிமரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினாலே அவதரித்தார். இயேசு இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து இரண்டாயிரத்து பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டாயிரத்து பிதினாறு ஆண்டுகளாக இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வருகிறது, அதாவது மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.

நோவா காலத்தின் ஜலப்பிரளயம் உண்டான நாட்கள் வரையிலும் மனுஷர்கள் எப்படிக் காணப்பட்டார்களோ அப்படியே இன்றும் மக்கள் காணப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையின் காலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னது, ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்தில் நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகும்மட்டும் உணராதிருந்தார்கள்: அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் என்றார் மத் 24:38,39.

இயேசு கிறிஸ்து மகிமை பொருந்தினவராய் திரும்பவும் வரப்போகிறார். அந்த நாளையும் அந்த நாளிகையையும் பிதா ஒருவர் தவர மற்றொருவனும் அறியான்: பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள் என்றும், அந்த நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்றும் ஆயத்தமாயிருங்கள் என்றும் இயேசு அன்று சொன்னார் மத் 24:36, 25:11,24,44.

மத் 24ம் அதிகாரத்தில் சீஷ்ர்கள் இயேசுவிடம் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்று கேட்டபொழுது முதலாவது அவர் சொன்ன காரியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்று ஏற்கனவே சாத்தானுடைய வஞ்சக வலையில் அகப்பட்டு இருக்கிறவர்கள் பாவத்தின் வஞ்சனையால் இருதயம் கடினப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் மனக்கண் குருடானவர்கள் இவர்கள் இருதயத்தினால் உணர்ந்துக் குணப்படாதபடிக்கு இவர்களுடைய இருதயம் கொளுத்திருக்கிறது. இவர்கள் காதுகளினாலே மந்தமாய்க் கேட்டு தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்திற்குப் போய் சொல்லு என்று இவர்களைக் குறித்து ஏகதேசம் கி.பி 400 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசாயா தீர்க்கத்தரிசியின் மூலமாய் தேவன் சொன்னதை அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் கூறியிருக்கிறார் (ஏசாயா 6:9-10, அப் 28:26-27).

பிசாசினுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற இவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாயும், தேவன் அவர்களுக்கு மனந்திருமபுதலை அருளத்தக்கதாகவும் சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ஏகதேசம் 2016 ஆண்டுகளாக சுவிசேஷ்ம் அளிவிக்கப்பட்டு வந்தாலும் இவர்கள் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு கர்த்தத்துவத்தை அசட்டைப்பண்ணி தேவனுடைய மகத்துவங்களைத் தூஷிpக்கிறார்களேத் தவிர மனந்திரும்பவில்லை. இதை குறித்து பரிசுத்த வேதத்தில் எரேமியா தீர்க்கத்தரிசி கூறும்போது அவர்கள் இந்நாள்மட்டும் மனம் வருந்தவும் இல்லை தேவனுக்குப் பயப்படுகிறதும் இல்லை என்னுடைய வேதத்தின்படி கட்டளைகளின்படியும் நடக்கிறதில்லை என்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார் (எரே 44:10).

இவர்களைக் குறித்து இதோ! எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியானவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியான பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றினிமித்தமும் அவர்களைக் கண்டிக்கிறதற்கும் ஆயிரமாயிரமான தம்முடைய பரிசுத்தவான்களோடும்கூட கர்த்தர் வருகிறார் என்று யூதா அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளபடி நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறவராய் இயேசு வருவார்.

நியாயத்தீர்ப்புக்கு தப்பிக்கொள்ள, மனந்திரும்பி தங்கள் துர்கரூமங்களையும், துர்க்கிரியைகளையும் விட்டு விலகுங்குள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட ஜீவவார்;த்தைகளை நினைவு கூருங்கள். இன்று சொல்லப்படுகிற சுவிசேஷத்தையும் விசுவாசித்து இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் கடைசி காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரரைப் போல இராதபடிக்கும், சகல அவபக்தியான கிரியைகளுக்கும், சகல வஞ்சகங்களுக்கும் விலகுங்கள். கடைசி நியாயத்தீர்ப்புக்குத் தப்ப இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, நீதிமான்களாக்கப்பட்ட பரிசுத்தவான்களைச் சேர்த்துக்கொள்ள இயேசு கிறிஸ்து வரப்போகிறார்.

இவர்கள் தங்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காய் போராடுகிறவர்களாயும் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, நித்திய ஜீவனுக்கு ஏதுவாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருக்கிறவர்களாயும் இருக்கிறார்கள் அல்லாமலும் நீங்கள் இரக்கத்தைப் பெற விரும்புகிறதுபோல பகுத்தறிவுள்ளவர்களாய் இருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரையாவது அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு இரட்சிக்கும்படிக்கு பிரயாசப்படுகிறவர்களாய் இருக்கவேண்டுமென யூதா அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார்.

பிசாசின் வஞ்சகங்கள் அரங்கேறி வருகிற இந்த நாட்களில் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு நீங்களும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸதுக்களும், கள்ளத்தீர்க்கத்தரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். இப்படிப்பட்ட வஞ்சகர்களை நம்பி உங்கள் பணத்தை வீனாக்காதீர்கள் நேரத்தையும் விரயமாக்காதீர்கள். இயேசு இங்கே இருக்கிறார், இங்கு அற்புதம் நடக்கிறது, பிசாசு ஓடுகிறது என்று கூறி உங்களுக்கு வசதியாக கார், வேன்களை அனுப்புவார்கள், அலைந்து திரியாதீர்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக் கௌ;ளுங்கள். உங்ளை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

நீங்கள் தேவனாலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருந்தால் மனுஷருடைய சூதும், வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவித வஞ்சகக்காற்றினாலே கடல் அலைகளைப்போல அடிப்பட்டு அலைகிறவர்களாய் இராமல் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் பெற்ற பரிசுத்த ஆவியானவர் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறார். அது சத்தியமாய் இருக்கிறது. அது பொய்யல்ல. அவர் உங்களுக்குப் போதித்தப்படியே அவரில் நிலைத்திருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கும்படிக்கு அவர் உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருங்கள்.

மேலும் பால்கொடுக்கிற தாயனவள் தன் பிள்ளையைக் காப்பாற்றுகிறதுபோல உங்கள்மேல் வாஞ்சையாய் இருந்து தேவனுடைய சுவிசேஷத்தைக் கொடுக்கிறதும் அல்லாமல் தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொலல்லுகிறதுபோல ஒவ்வொருவருக்கும் புத்தியும், தேறுதலும், எச்சரிப்பும் சொன்ன அப்போஸ்தலனாகிய பவுலைப்போல உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள், இதுவே உங்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கும். இளையக் குமாரனைப் போலத் தகப்பனையும் தகப்பன் வீடாகிய சபையையும் விட்டு தூரதேசம் போகாதீர்கள். உங்களுக்குப் பணம் இருக்கும்மட்டும், பெலன் இருக்கும்மட்டும் உல்லாசமாய் யாத்திரை செய்வீர்கள். உங்கள் பணமெல்லாம் செலவழிந்து பெலன் ஒடுங்கும்போது உங்களை வஞ்சித்தவர்கள் உங்களை எமாற்றிப்பிழைத்தவர்கள் எல்லாரும் போய்விடுவார்கள். உங்கள் பணத்தினாலே பணக்காரரானவர்கள் ஐசுவரியவான்களோடு இருப்பார்கள், நீயோ தரித்திரமடைந்து சிறுமைப்பட்டுக் காணப்படுவாய். இந்நிலையில் அவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. அது அவர்கள் வஞ்சம், நீயோ வஞ்சிக்கப்பட்டாய்.

பொதுவாகச் சொல்வார்கள் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரையும் ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள் என்று. நீ வஞ்சிக்கப்படாமலும், ஏமாற்றப்படாமலும் இருக்க தகப்பனையும், தகப்பன் வீட்டையும் மறந்துவிடாதே. அவன் உன் தகப்பன். இன்று வசனத்தைக்கொண்டு சிட்சித்தாலும், நீ திக்கற்றுப் போகும்போது உனக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி உன்னை அணைக்கிறவர். ஒருவேளை வஞ்சகர்களால் வஞ்சிக்கப்பட்டு, சிறுமைப்பட்டிருக்கும்போது அவர்களால் கைவிடப்பட்டும், மனம் நொந்துப்போன நிலையிலும் காணப்படுகிறீர்களோ? தகப்பனிடத்திலோ, தகப்பன்வீட்டிற்கோ திரும்பி வருகிறதற்கு வெட்கப்படாதிருங்கள். தகப்பனுடைய கரம் உங்களை ஏற்றுக்கொண்டு அணைக்கிற கரமெ. முன்னிலும் அதிகமாய் அன்பு கிடைக்கும். உயர்ந்த வஸ்திரமும் கிடைக்கும். தகப்பனுடைய இரட்டிப்பான சந்தோஷத்திற்கு ஏதுவானவர்களாயும் காணப்படுவீர்கள். நீ தெளிந்த புத்தி அடைந்திருப்பாய். உனக்குச் சமாதானம் உண்டாயிருக்கும். இப்பொழுது நீ தேவசித்தத்தில் இருக்கிறாய். இனி நித்திய ஜீவனை இழந்துவிடமாட்டாய். உனக்கு நித்திய ஜீவனை கொடுக்கும்படிக்கு இயேசு வரப்போகிறார்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாட்களுக்கு முன் நடக்கிற சம்பவங்களில் முக்கியமான ஒன்றான வஞ்சகத்தைக் குறித்தும் இன்றும் நடைமுறையில் நடந்து வருகிற காரியங்களைக் குறித்தும் பார்த்தோம். இன்னும் வேதனை அளிக்கக்கூடிய சம்பவங்களையும் பார்க்கப்போகிறோம்.

யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கவங்காதப்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் இவைகளெல்லாம் முடிவுக்குமுன் சம்பவிக்க வேண்டியதே என இனி சம்பவிக்கப்போகிறவைகளைக் குறித்து இயேசு சொன்னார். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம் என்று சொன்னார். இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம் என்றால் முடிவு நெருங்க நெருங்க இன்னும் வேதனைகளும் பெருகும்.

2016 நவம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தைப் பாருங்கள். எவ்வளவு வேதனையான காரியம். இது நிமித்தம் ஜனங்கள் எவ்வளவு வேதனைகளையும், இன்னல்களையும் அடைந்தார்கள். ஜனங்களுடைய இருதயம் கரைந்து போனதல்லவா!. துகவல் தொடர்பு அற்றுப்போய் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி ஜனங்கள் தத்தளித்தபோது அவர்கள் வேதனை எப்படி இருந்திருக்கும். இதுமாத்திரமா? வெளியூர்களில் இருந்து உறவினர்கள் தொடர்பு கொள்ள விரும்பி தொர்பு கிடைக்காதது எவ்வளவு வேதனை. இதன் மத்தியில் தகுந்த நேரத்தில் உதவி கிடைக்காமல் பரிதாபமாய் இறந்துபோனவர்கள் எத்தனைபேர். அவர்களை இழந்த குடும்பத்தினருடைய வேதனை எப்படியிருந்திருக்கும். தங்கள் ஜீவன் தப்பினால் போதுமென அடைக்கலம் தேடி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றும் இரவும் பகலும் அவர்கள் பட்ட வேதனை எவ்வளவு. இப்படி வேதனை ஒன்றா, இரண்டா. இவைகளெல்லாம் முடிவுகால வேதனைகளுக்கு ஆரம்பம் என்பதை நினைவுப்படுத்துகிற ஒரு சம்பவம். உலகமெங்கும் இப்படி எவ்வளவோ வேதனைகள் பெருகிவருகிறது.

ஆரம்பம் ஒன்றிருந்தால் முடிவும் ஒன்று உண்டு அல்லவா? பிறப்பு ஒன்றிருந்தால் மரணமும் ஒன்றுண்டே. ஆங்காங்கு வேதனைகள் பெருகியிருந்தாலும் முடிவு இன்னும் வரவில்லை. இந்த வேதனைகள் தற்காலிக வேதனைகளே. ஆண்டவர் ஜனத்தின்மேல் அன்புகூர்ந்து இந்த தற்காலிக வேதனையை அனுமதிக்கிறார். இந்த தற்கால்க வேதனைகளின் மத்தியில் மனிதன் தன்தன் அக்கிரமங்களை விட்டு தேவனைத்தேட மனந்திரும்ப வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். இந்த நோக்கத்தை அறியாதவர்களில் சிலர் கடவுள் இல்லை என்றும் நான் நம்புவதில்லை என்றும் சொல்கிறார்கள். பலர் ஆண்டவரை தூஷிக்கிறார்கள். அநேகர் ஆண்டவரை விட்டும் பரிசுத்த கற்பனையை விட்டும் விலகிப்போகிறார்களேத் தவிர தேவபயத்தோடு உணர்வடைந்து மனந்திரும்ப மனமில்லை. அநேகருக்கு விசுவாசமும் நம்பிக்கையும் குறைந்து போகிறது. ஆக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பும் தனிந்து போகிறது.

பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 9வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆறாம் தூதன் எக்காளம் ஊதினபோது அக்கினி, புகை, கந்தகம் மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொரு பங்கு கொல்லப்பட்டார்கள். அப்படியிருந்தும் அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி, செம்பு, கல், மரம், என்பவைகளால் செய்யப்பட்டவைகளையும் காணவும், கேட்கவும், நடக்கவும், மாட்டாதிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்கு தங்கள் கிரியைகளை விட்டு மனந்திருமபவும் இல்லை. தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும், விட்டு மனந்திருமபவும் இல்லை (வெளி 9:13-21)

நீங்கள் மனந்திரும்புங்கள் உங்கள் எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்;: அப்பொழுது உங்கள் அக்கிரமம் உங்கள் கேட்டுக்கு காரணமாயிருப்பதில்லை. நீங்கள் துரோகம் பண்ணின உங்கள் எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி உங்களுக்கு புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் ஏன் சாகவேண்டும். சாகிறவனுடைய சாவை நான் விரும்பவில்லை. மந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் எசேக் 18:30-32.

உலத்தின் முடிவைக் குறித்து ஆண்டவர் சொன்னபோது பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று உடன்படிக்கை பண்ணினபடியால் ஜலம்பிரளயமாய் வருவதில்லை. சில கிராமங்கள் மூழ்கும்படி வீடுகள் மூழ்கும்பழ, சில பட்டணங்கள்கூட மூழ்கும்படி மழை வெள்ளத்தை வருவிக்கலாமே தவிர பூமியின் மதகுள் திறப்பதில்லை. இந்த வெள்ளங்களெல்லாம் மழை நின்றதும் வடிந்துபோய்விடும். நோவா காலத்pல் பூமியின் மதகுள் திறக்கப்பட்டபடியால் ஜலம் பிரளயமானது. பூமியில் ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு முடிந்ததும் அவர் கட்டளையிட ஜலம் வற்றினது எனப் பார்க்கிறோம் இனி இந்த உலகம் ஜலப்பிரளயத்தினால் அல்ல இப்போது இருக்கிற வானங்களும் பூமியும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு உருவழிந்து போகும் காலம் சமீபித்திருக்கிறது.

இன்று உலக நாடுகள் தங்களை வரிந்து கட்டிக்கொண்டு, போட்டிப்போட்டு அணு ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வானமண்டலம் வாயுக்களால் நிரம்பியிருக்கிறது இதுவும் போதாது என்று சந்திரனுக்கும், கிரகங்களுக்கும் சென்று உலகத்தின் முடிவைக் குறித்த தேய்வத் திட்டத்தை அறியாமல் அழிவுக்கான ஆயத்தங்களைப் பண்ணிக்கொண்ழருக்கிறார்கள். மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கு உலக நாடுகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தாமதம் இந்த பேரழிவை தாமதப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் மரண்டாம் வருகையில் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்டபின் உலகம் முடிவைச் சந்திக்கும்படி ஆயத்தப் பட்டாகவேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது என்பதை இப்பொழுது நடந்தேறுகிற சம்பவங்கள் எல்லாம் வெளிப்படுத்துகிறது. நித்தியநித்தியமான வேதனை கொடுக்கக்கூடிய நித்திய நரகத்தையும், நித்திய நித்தியமான சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய பரலோகத்தையும் தேவன் நியமித்திருக்கும்போது அததற்;குரியவர்களும் ஆயத்தமாகவேண்டும் அல்லவா. இதைக்குறித்து வெளிப்படுத்தல் புத்தகத்தில் 22ம் அதிகாரம் 11, 12 வசனங்களில் பார்க்கும்போது: காலம் சமீபமாயிருக்கிறது, அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்: அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்: பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

பிரியமானவர்களே! தேவன் மேல் இருக்கிற விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காத்துக் கொண்டு நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே பொறுமையோடே ஓடக்கடவோம்.

 

அல்லேலூயா!