Smart Tenkasi

மாற்றத்தை எதிர்கொள்ளுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்

மாற்றம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று.  அதுவே வாழ்க்கை என்று கூறலாம்.
    மாற்றம் என்பது தொடர்ந்து நிகழக்கூடியது மாற்றத்தை வரவேற்க தொடங்கிவிட்டால் அவற்றை எதிர்கொள்ள தயாராவதில் சிரமம் இருக்காது.  மாற்றம் தவிர்க்க முடியாதது என பலர் அறிந்திருந்தாலும் சிலராலேயே மாற்றத்தைச் சிறப்பாக எதிர்கொள்ளமுடிகிறது.  நமது மனோபாவமும் அணுகுமுறையுமே நாம் மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.
    காலத்தின் போக்கில் அடித்துச் செல்லப்படுவது அல்ல வாழ்க்கை.  மாற்றத்தை உணர்ந்து சிதைந்து போகாமல் நிலைத்து இருப்பதே வாழ்க்கை.  அத்தகைய நிலைத்த வாழ்க்கைக்கு தேவையானவற்றை உணர்ந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
    மாற்றம் எத்தகையதாய இருக்கும் என்று எதிர்நோக்குவது ஒருவிதமான அச்சத்தைக் கொடுக்கக்கூடாது.  தயார்நிலையை உணர்த்தவேண்டும்.  மாற்றத்தை துணிவுடன் ஏற்க எந்த சூழ்நிலை இயலாமையைக் காண்பிக்கின்றதே அதே சூழ்நிலையை உற்றுப் பார்த்தால் மற்றொரு அம்சம் வலிமையைக் காண்பிக்கின்றன.  மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்டவிதத்தில்தான் ஏற்படவேண்டும் என்று குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்நோக்கக்கூடாது.  சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். 
    புதிய கோணத்தில் ஆராயும்போதுதான் எத்தகைய கடினமான பிரச்சனையாக இருந்தாலும் அதற்குத் தீர்வு காணமுடியும்.  பல்வேறு கோணங்களில் பல்வேறு உத்திகளில் பிரச்சனைகளை அணுகும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்கள் வெளிப்படும்.  நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள்தான் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனைப்பெற உதவுகின்றன.  அத்தோடு போராடி வெற்றிக்கொள்ளும் மனோபாவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    மாற்றத்தை எதிர்கொள்ளும்போது உணர்வுரீதியிலும்இ கால அவகாசம் என்ற நிலையிலும் இரண்டு காரணிகள் முக்கியமானவைகள்.
    ஒரு குழந்தை வளர்ந்து இளமைப்பருவத்தை அடையும் போது பழக்கவழக்கங்களில் பெரிய மாற்றத்தைப் பார்க்கமுடியும்.  செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.  செயல்பாடுகளில் வரும் மாற்றத்தைச் சற்றும் எதிர்பாராத பெற்றோர்களால் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை காலப்போக்கில்தான் பருவ வளர்ச்சியின் தாக்கம் என்று பெற்றோர்கள் உணரும் நிலை ஏற்படுகிறது.
    இணக்கமாக நடந்துகொள்ளுதல் திறந்த மனதுடன் மாற்றங்களை எதிர்கொள்வதுஇ கற்கும் மனோபாவம்இ உள்ளார்ந்த ஆர்வம் போன்ற திறன்களைப் பெற்றிருத்தல் மற்றும் வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை மாற்றங்களை எதிர்கொள்ள உதவும்.  மாற்றங்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ளத் தவறினால் அதன் விளைவு வளர்ச்சியைப் பாதிக்கலாம்.  இதுதான் காலமாற்றத்தில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை முன்னேறுவதற்கும்இ பின்தங்குவதற்கும் காரணமாய் இருக்கும்.
    மாற்றத்தின் தேவைப்பற்றி விழிப்புணர்வு இருக்கவேண்டும்.  மாற்றத்தில் பங்குகொண்டு துணைபுரியும் தாகம் இருக்க வேண்டும்.  மாற்றத்திற்கேற்ப கற்கும் முறைக்குறித்த அறிவு இருக்கவேண்டும்.  உரிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் திறன் இருப்போர்களாகவும்இ அறிவாற்றல் செயலாக மாற்றும்திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.  செயல்பாடுகள் தொடர்ந்தால்தான் ஏற்கனவே ஏற்படுத்திய மாற்றங்களை நிலைநிறுத்த முடியும்.
    ஒரு நிகழ்வு நடக்கும்போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம்?
    பொருளாதாரப் பின்னடைவு உலகளாவியதாக இருந்தாலும்இ எத்தகைய பாதையை தீர்வுசெய்து முன்னேற்றப் பாதையைத் தொடருகிறோம்இ தனி மனிதனாக எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம்.
    “ஏற்றுக்கொண்ட நிலைபாடுகளைத் தாண்டி எதிர்கொள்ளும் புதிர்களுக்கு விடையளிக்கும் முயற்சியே ஆக்கப்பூர்வமான சிந்தனை” என்கிறார் உளவியல் வல்லூநர் எரிக்ப்ராம்
    அவரவர் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியாளர்களாகத் திகழ்வதற்கு முக்கிய காரணம் மாற்றங்களை ஏற்றுக்கெண்டு செயல்பட்டதன் விளைவே ஆகும்.  ஏதாவது ஒரு முயற்சியில் இறங்கினால்தான் அவரவரது திறமையை மதிப்பீடுச் செய்யமுடியும்.  எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகின்ற யதார்த்த உலகில் அனைத்தையும் பெறுவது என்பது எளிதில் சாத்தியமில்லைஇ அவரவரின் சமயோஜித அறிவுஇ விடாமுயற்சிஇ துணிந்து காரியத்தில் இறங்குவதுஇ தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதுஇ குறைகளை உணர்ந்து திருத்திக்கொள்வது என்று மாறுகின்ற உலகிற்கேற்ப தங்களது நிலைபாட்டில் தேவைப்படுகின்ற மாற்றங்களை மேற்கொள்பவர்களே வெற்றியாளர்கள்.
    எதிர்காலம் என்பது தானாக நிகழ்வது இல்லை.  ஒவ்வொரு தனிமனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளே எதிர்காலத்தை உருவாக்குகிறது.

மாற்றத்தின் தேவையும்இ தடையும்  
    ஒரு மாற்றம் அவசியம் என்று தோன்றினாலும்இ சில காரணிகள் தடையாக இருக்கலாம்.  சில மாற்றங்களை தன்னிடத்திலும்இ சுற்றுப்புறத்திலும் ஏற்படுத்துவதின் மூலம் நாளடைவில் அந்த மாற்றங்கள் தடையாக இருக்கும் காரணிகளைத் தகர்த்துஇ புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள செய்யும்இ எனவே மாற்றங்களை உருவாக்க விரும்புபவர்கள் தன்னிடத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும்இ அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகவும் இருக்கவேண்டும்.
தடையாக இருக்கும் காரணிகள்
•    புதிய சூழ்நிலைகள்இ மாற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு ஏற்படும் ஒருவகை அச்சம்இ ஒருவகை பாதுகாப்பு உணர்வு போன்றவை.
•    எந்தவித இடையூறும் நிகழக்கூடாது என்பதற்காக தேவைக்கு அதிகமாக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுதல்.
•    மாற்றங்களை மற்றவர்கள் வரவேற்கமாட்டார்கள் என்று கருதி எந்த மாற்றங்களையும் செயல்படுத்தாமல் இருத்தல்.
•    மாற்றங்களை எதிர்கொள்ள போதிய திறன்கள் இல்லாமைஇ மற்றும் சரியான உத்திகளைக் கையாளத் தெரியாத திறமைக் குறைவு.
•    மாற்றத்தின் பரிமாணத்தை துல்லியமாக மதிப்பிடத் தெரியாத நிலை (குறிப்பாக மாற்றத்திற்குத் தேவையானதும் காரணமாகவும் அமையும் சில காரணிகளை மதிப்பிடத் தெரியாதது)

மாற்றத்தின் தேவைகள்
1.    அன்பு பாராட்டும் பண்புஇ பிறரை மதித்து நடந்து கொள்ளுதல்இ மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்.
2.    குறைஇ நிறைகளுடன் தங்களைத் தாங்களே ஏற்றுக் கொண்டு செயல்படக்கூடிய சுய அன்பு.
3.    மாற்றங்களையும்இ வித்தியாசங்களையும் முக்கியத்துவம் அளித்து ஏற்கும் மனோபாவம்.
4.    சுயமாக செயல்படுதல் மற்றும் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்று செயல்படுதல் போன்றவையாகும்.