Smart Tenkasi

மன்றாட்டு ஜெபம்

மன்றாட்டு ஜெபம் செய்கிற ஜெப வீரர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். ஜெப

வீரர்கள் இரும்பு மனிதர்களாய் இருக்க வேண்டும். ஏனெனில் ஜெப வீரர்கள்

சாத்தானின் ராஜியத்தை தாக்க முயற்சிக்குமுன் தாங்களே அவனால்

தாக்கப்படுவார்கள் ஜெபம் தேவனிடம் சமர்பிக்கும் வெறும் விண்ணப்ப பட்டியலாக

மட்டும் இருக்க கூடாது .அது ஜெபத்தை பற்றிய பரந்த சத்தியத்தின்; ஒரு பகுதியே .

இ.எம் பவுண்ட்ஸ் என்னும் பக்தன் “ஜெபமென்னும் ஆயுதம்” என்ற நூலில் “தவறு

செய்வதினால் பணியைக ;கூட தவற விடலாம்; ஆனால் அசட்டையினால் ஜெபத்தை தவறவிடவே

கூடாது” எனக் கூறியுள்ளார்

நிச்சயமாகவே ஜெபம் தவறுவதினாலேயே எழுப்புதல் தாமதிக்கிறது. ஜெபிக்கும்

மனிதருக்குத்தான் சாத்தானும் நரகமும் பயப்படுகிறது. ஆவிக்குரிய உலகில்

ஆத்துமாவின் விலையுயர்ந்த ஆடைகள் ஜெபமாகிய தரியில் நெய்யப்ட்டு

கிறிஸ்துவின் பாடுகளாகிய வேதனையில் சாயம் ஏற்றப்படுகின்றன.

ஹென்றி மார்டின் “எனக்கு கிடைத்திருக்கும் வெளிச்சத்தின் அளவுக்கு என்னில்

அனல் இல்லையே” என வருந்தினார்

மன்றாட்டு ஜெபத்தில் அனலற்று இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும்

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பிசாசு ஒரு போதும் பரிசுத்த வான்களை உருவாக்க

முடியாது. ஜெபிக்காத போதகர்களும் ஒருபோதும் மன்றாட்டு வீரர்களை எழுப்ப

முடியாது. பட்டறையிலிருந்து தெறிக்கும் ஒரு சிறு நெருப்பு பொறி ஒரு

பட்டணத்தையே கொளுத்திவிட முடியும். ஒரு சிறு நெறுப்பு ஒரு காட்டையே கொளுத்திவிட

முடியும். நீ ஓரு அக்கினி பொறியாய் ஒரு தீக்கண்டமாய் மாற வேண்டும்.. உன்னை

கொன்டு எழுப்புதலை வரவழைப்பார். நீ ஒரு ஜெப வீரனாய் எழும்பு எழுப்புதல்

தாமதிப்பதில்லை.

டேவிட் பிரெய்னார்டின் இனையற்ற ஜெப வாழ்கையிலிருந்து வில்லியம்

கேரிஇ எட்வர்டுபேசன் பேன்ற ஆத்தும ஆதாய வீரர்கள் ஆரம்ப ஒளியை பெற்றுக்

கெண்டார்கள.; வில்லியம் கேரியான அந்த ஆத்தும ஆதாய வீரன் பிரெய்னார்டின்

வாழ்கை சரிதையை படித்த போது அவன் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கினது.

பிரெய்னார்டின்; உருகின்ற ஆத்துமாவினின்று எட்வர்டு பேசன் தனது

இருபதாவது வயதில் பிரெய்னார்டையும் தோற்கடிக்கும் வகையில் ஒரு ஜெப வீரனாக ஒரு

ஜெபவாழ்கையை ஆரம்பித்தார் .

பிரெய்னார்டின் இன்னொறு கனியான “இராபர்ட் முர்ரே மச்சேயின்”

என்ற பக்தன் ஒரு ஜெப வீரனாக வாழ்ந்து தனது 29வது வயதில் பூரன வயதுள்ளவராய்

மரித்தார். நன்றாக வாழ நீடித்து வாழ அவசியமில்லைஇ 29வயது நிரம்பிய ஒருவர்

நுர்று வயது ஞானத்தோடு மரிக்க முடியும் .

“யோனத்தான் எட்வர்டு”கூறும்போது நான் அவருடைய ஜெபங்களை கேட்டு அவருடைய

சமர்பணத்தைக் கண்டு அவருடைய முன்மாதிரியால் கவரவப்பட முடிந்தது என்கிறார்.