Smart Tenkasi

சுபாப அன்பும்-தெய்வீக அன்பும்

          சுபாப அன்பும்-தெய்வீக அன்பும்
சுபாவ அன்பு
    ஓவ்வொருவருக்கும் இயல்பாகவே அன்பு, பாசம், பற்று போன்றவை பிறப்பிலே உள்ளது. தேவ அன்பு (தேவ சாயல்) தேவன் மனிதனை உண்டாக்கும் போதே  இருந்தது.   மனிதன்    தேவ அன்பின் கட்டுபாட்டுக்குள்  தன் சுபாவ அன்பை கொள்ளும்   போது  தேவனை விட்டு   விலகி, பரிசுத்தத்தை விட்டு விலகி, பாவத்தை நேசிக்க மாட்டான். தேவ அன்பு தவறுதலாய் செயல்படாது
     முதல் மனிதன் தேவனை விட்டும், தேவ அன்பை    விட்டும்    விலகினபடியால்     சுபாப      அன்பு கட்டுபாடு அற்று தவறுதலாய்  செயல்பட      ஆரம்பித்தது.  சகிப்புத்தன்மையை    இழந்து, பொறுமை    இழந்து,        பொறாமையுடனும்,  பகையுடனும்,  எரிச்சலுடனும்,  இதயத்தை நிரப்பி கொலைபாதகனாய் மனிதன் மாறினான் .
     (எ.கா)காயின் ஆபேல்
     சகோதரனை     பகைக்கிறவன்      மனித             கொலைபாதகன்        என்று வேதம்      கூறுகிறது.    சுபாப      அன்பு மாயமுள்ளதாயிற்று.       பகையை     இருதயத்தில்    வஞ்சகமாய்  மறைத்து   வைக்க      துவங்கினான்         மனிதன் இதயத்திற்குள்ளிருந்து    பொல்லாத    சிந்தனைகளும்,    விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதங்களும், களவுகளும்,    பொருளாசைகளும்,    துஷ்டத்தனங்களும்,    கபடும்ம்,  காமவிகாரமும், வண்கண்ணும், தூஷணுமும், பெருமையும்,      மதிகேடும்   புறப்பட்டது. மாற்கு 7:21-22 நயவசனிப்போடு பேசி ஒருவரை ஒருவர் வஞ்சிக்கிறவர்கள் ஆனார்கள்.
     வசனத்தாலும், நாவினாலும்,  அல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்பு கூறக்கடவோம் என்று வேதம் கூறுகிறது. 1யோ 3:18
           பெற்றோர்,        சகோதரர்கள்,      நண்பர்கள்,      மனைவி,       பிள்ளைகள், அந்நியர்   என்று ஒருவரோடு ஒருவர் உறவாடுவதற்காக இயல்பாகவே  வெளிப்பட  வேண்டிய    சுபாப   அன்பு.   மனிதனின்  அன்றாட  வாழ்கையில் சீரான   வாழ்கைக்காக தேவனால்  அருளப்பட்ட  இந்த    அன்பிலே     பெறும்பாலானோர்   திருப்தி   அடைந்து   விடுகின்றனர். அநுதாபத்தால்   ஏற்படும்-பிரிவு, பழக்கத்தால்  உருவாகும்- நேசம், நல்லதை செய்பவர்கள் மேல் ஏற்படும் -மரியாதை இனமத அடிப்படையில் தோன்றும் நட்பு,    ரசிக்கதகுந்த செயல்பாட்டால் சிலர்     மீது உண்டாகும் பற்று, இச்சையால் உருவாகும் கவர்சி(காதல்)   போன்றவற்றை   உலக அன்பு   எனலாம். இந்த   விதமான   அன்பையே     மக்கள்    பலர்  பிரதானமாக  கருதிக்கொன்டு    இதற்கேற்றபடி    வாழ்கையை   நிலைபடுத்தி கொள்கின்றனர்.  இதுபோன்ற அன்பை  நாம் காட்டினாலும்    நமக்கு     காட்டப்பட்டாலும்.    இதற்கு    பதில்    செய்யப்பட்டுவிடுவதால் சிறப்பு ஒன்றுமில்லை இக்காலத்தில் இந்த அன்பு    எதிர்பார்புடன் கூடியதாக     மாறிவிட்டது.     அக்கிரமம்  மிகுதியாவதால் அநேகருடைய அன்பு    தனிந்து     சன்டை       சச்சரவுகள்     உறுவாகிவிட்டன.    மத்24:12    இந்த அன்பு    இக்கட்டான நிலைமையில் பொறுமையை     இழுந்துவிடும்    சிலருக்கு செயல்பட்டால் அன்பு தனிந்துபோய்     வாழ்ந்து   பெற்றோர்-பிள்ளைகள்   கனவன் மனைவி நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.
தெய்வீக அன்பு:
    இது உலக அன்பிற்கு முற்றிலும் மாறுபட்டது. இதற்கு எல்லையே இல்லை. அன்பு கூறுகிறவர்களுக்கு மட்டுமல்ல எதிராய் இருப்பவர்கள் பகைப்பவர்கள் பார்த்தாலே பிடிக்காதவர்கள் என்று அத்தனை தரப்பினர்   மீதும் காட்டக்கூடிய அன்பு தேவ அன்பு. சுபாப அன்பையே தெய்வீக   அன்பு என   நினைத்துக்    கொள்ளும் பக்தர்கள்  கூட   குழம்பும் நிலை உள்ளது. தெய்வீக வாழ்கைக்கு தேவைப்படும்    ஆவியின்   கனிகளான   அனைத்து    நற்குணங்களையும் உள்ளடக்கி இருக்கும் ஒரே அம்சம் தெய்வீக அன்புதான். எபே.5:9
      இந்த அன்பு பரிசுத்த ஆவியானவரால்    இருதயத்தில்   ஊற்றப்படுகிறது. ரோம.5:5. வேதம் சுட்டிகாட்டும் தெய்வீக அன்பின் குணங்களின் மூலம் பக்தி முழுமை      அடைகிறது. 1கொரி.13:1-3      தேவ        அன்பின்     கனி    இல்லாமல் செய்யப்படுகிற ஊழியமும் முழுமையானது  அல்ல. அமைதியான காலத்தில் தெரியாவிட்டாலும்    பிரச்சனைகளை எதிர் கொள்ளும் போது உலக அன்பா, தெய்வீக அன்பா    என்பதை நாம்    சீர்தூக்கி    பார்க்க வேண்டும்.   ரோம.8:35-39
      வேதம் கூறும் விசுவாசம், நம்பிக்கை,    அன்பு இம்மூன்றம்   நிலைத்திருக்கிறது. இதில்   அன்பே பெரியது. 1கொரி 13:13. இது     தெய்வீக    அன்பே தேவ    பக்தியில்      வளர்ந்து போக   விசுவாசமும்,    நம்பிக்கையும் உதவுகிறது. இது விசுவாசிகளின்    சுயப் பிரயோஜனத்திற்கானவைகள். ஆனால் தெய்வீக நன்நடத்தையை கடைபிடிப்பதற்கு தெய்வீக அன்புதான் உதவும.; தெய்வீக அன்பு    பிற பிரயோஜனத்திற்கு உகந்தவை.  ஆனதால் தேவ பக்திக்கு அன்பே பெரியது. என வேதம் கூறுகிறது.   கற்பனையின்   பொருள்   என்னவெனில்   சுத்தமான   இருதயத்திலும், நல்மனசாட்சியிலும், மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே 1தீமோ.1:15   இந்த தேவ   அன்பில்    பயமில்லை. பூரன அன்பு பயத்தை புறம்பே தள்ளும். பயப்படுகிறவன்     அன்பில் பூரணப்பட்டவன்   இல்லை. 1யோவா.4:18 எல்லாவற்றிறற்கும் மேலாக ஒருவரில் ஒருவர் ஊக்கமான     அன்புள்ளவர்களாய்    இருங்கள்    அன்பு     திரளான    பாவங்களை   மூடும் 1பேது,4:8 
      நாம் அவருடைய   கற்பனையின்படி     நடப்பதே     அன்பு. நீங்கள்    ஆதி முதல்   கேட்டிருக்கிறபடி நடந்து கொள்ள வேண்டிய கற்பனை    இதுவே. 1யோவா.1:6 காரியத்தின் கடைத்தொகையை   கேட்போமாக தேவனுக்கு பயந்து அவர் கற்பனையை கைக் கொள் எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே. பிரச.12:13