Smart Tenkasi

ஆசிரியர் உரை

brother.jpg

கிறிஸ்துவுக்குள் பிரியமான “நம்பிக்கை மலர்” வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இணையதளத்தில் வெளிவந்த “நம்பிக்கை மலர்” என்ற இதழ் கடந்த ஒரு ஆண்டு காலமாக சூழ்நிலைகளால் நிறுத்தப்பட்டிருந்தது இப்பொழுது திரும்பவும் துவங்க கர்த்தர் கிருபை செய்துள்ளார்.

2016ல் புத்தாண்டு வாழ்த்துக்களோடு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” – ஏசாயா 26:3.

பூரண சமாதானம் யாருக்கு?

1. ஆண்டவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதை உடையவன்.

2. அவரையே நம்பியிருக்கிறவன்.

விசுவாசத்தின் மூலமாய் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதோடு அவரையே நம்பியிருங்கள். அப்பொழுது பூரண சமாதானத்துடன் ஆண்டவர் காத்துக்கொள்வார்.

உங்கள் ஜெபத்தின் மூலம் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.

2016ம் ஆண்டில் உங்களையும், உங்கள் முழு குடும்பத்தையும் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வாராக என வாழ்த்துகிறேன்.

தேவனுடைய கிருபையும், சமாதானமும் யாவருடனும் இருப்பதாக.

கிறிஸ்துவின் பணியில்

போதகர். R.லாரன்ஸ்