Smart Tenkasi

உறவுகள் மேம்பட

பின் விளைவுகள் இன்றி நம் உறவுகள் மேம்பட நாம் என்ன செய்ய வேண்டும்
பின் வரும் சுலபமான வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும்

அர்த்தமில்லாமலும் பின்வினைவு அறியாமலும்     
பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்

எந்த விசியத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக
கையாளுங்கள்

விட்டுகொடுங்கள்

சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் 
ஆக வேண்டுமென்று உணருங்கள்

நீங்கள் சொன்ன தே சரி செய்ததே சரி என்று 
வாதாடாதீர்;கள்

குறுகியமனப்பான்மையை விட்டொழியுங்கள்

உண்மை எத பொய் எது என்று விசாரிக்காமலே 
இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே 
கேட்டதை இங்கே சொல்வதையும் விட்டு விடுங்கள்

எல்லாரிடத்திலும் எல்லாவிஷயத்தையும் செல்லிக் 
கொண்டிருக்காதீர்கள்

மற்றவர்கள் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற 
நிகழ்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

புன்முறுவலை காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை 
சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து 
கொள்ளாதீர்கள்

அவ்வப்போது நேரில் சந்தித்து மனந்திறந்து பேசுங்கள்

மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி 
நினைத்து கர்வப்படாதீர்கள்

நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை 
விடுங்கள்

அளவுக்கதிகமாய் தேவைகதிகமாய் ஆசைபடாதீர்கள் 

உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாயிராமல் கொஞ்சம் 
தளர்த்தி கொடுங்கள்

மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய 
இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்

அற்பவிஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்

பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் 
தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து 
அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனை ஏற்படும போது அடுத்தவர் முதலில் இறங்கி வர 
வேண்டுமென்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க 
முன்வாருங்கள்