Smart Tenkasi

வாய்ப்புகள்

232014esther.jpg

ஒரு மனிதனுடைய வார்க்கையில் வாய்ப்புகள் எப்பொதும் வந்து வந்து நமது வீட்டுக் கதவை தட்டிக்கொண்டு நிற்பவை அல்ல. அவை எப்போதாவது வருபவை.  வாழ்க்கையில் அவ்வப்போது கிடைக்கிற சந்தர்ப்பங்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்


    காற்று வீசும்போது தானியத்தை அதன் பதர் நீக்கும் படி தூற்றுவார்கள்.  காற்று நின்றுபோன பின் தூற்றினால் பதர் நீங்காது.  அப்படியே வாழ்க்கையில் அவ்வப்போது கிடைக்கிற சந்தர்ப்பங்களை வாய்ப்புகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


    வாய்ப்புகள் கைகூடி வந்தாலும்கூட எதுவுமே செய்யாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள் உண்டு.  இப்படிப்பட்டவர்கள் தன் வாழ்வின் முன்னேற்றத்துக்குத் தானே தடைகல்லானவர்கள்.  வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடப்பவர்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவ விட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.


    வாழ்வில் தனக்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்புகளையும் சரியாய் பயன்படுத்திக் கொள்ளுபவன் அதிர்ஷ்ட தேவதைக்குக் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.  வாய்ப்புகள் எப்போது வரும் என கண்ணும் கருத்துமாய் காத்திருப்பவன், கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தான் எண்ணிய வாழ்வில் முன்னேற்றத்தைப் பெறுவான்.  சூழ்நிலைகளைக் கண்டு பின்வாங்குவோமானால் வந்த வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடும் மீண்டும் அதைப் பெறமுடியாது.


    வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்போது தொடர்ச்சியாய் வருகிற சூழ்நிலைகள் நம்மை மிரட்டக்கூடும் அப்போது அதை நாம் கண்டுகொள்ளாமல் செயலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.


    வாய்ப்புகளை தக்க முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் புத்திசாலி.  அவன் வாழ்வில் வெற்றி பெறுவான்.  இப்படி வாழ்வில் வெற்றி பெற்று உலகில் புகழ்பெற்றுத் திகழுகின்ற வல்லுனர்களை நாம் காணமுடியும்.  இவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை தங்கள் வசப்படுத்திக் கொள்வதில் வல்லுனர்களாக இருப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும்.  இதையெல்லாம் எண்ணிப்பார்க்காமல், சோம்பேறித்தனமாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு வாழ்க்கையில் எனக்கு எதுவுமே வாய்க்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் வீணடித்து விடுகிறார்கள்.


    சிலர் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைத் தகாத முறையில் பயன்படுத்த முனைவார்கள், அல்லது யாருக்குமே பயன்படாத வகையில், கைகூடி வரும் வாய்ப்புகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்.  இவர்களால் தங்களுக்கோ பிறருக்கோ எந்த லாபமும் இல்லை.


    இன்னொரு முக்கியமான காரியம், நமக்கு நல்ல தருணங்கள் வாய்க்கும் போதெல்லாம், அந்த வாய்ப்புகளை நாலுபேருக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு நம் சிந்தையை கூர்மையாக வைத்திருக்க வேண்டும்.  நல்ல சிந்தையுடையவர்களே நாலுபேருக்கு நன்மை உண்டாகும்படி வாழ நினைக்கிற சுயநலமற்றவர்கள்.  இவர்கள் அற்பணிப்புள்ளவர்கள் அற்பணிப்புள்ளவர்களால் தான் பிறர் வாழ்விலும் நன்மைகள் உண்டாகும்படி வாழ நல்ல எண்ணமுடையவர்களாய் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.  


உன் வழி வாய்க்க வேண்டுமானால் உன் வழியை ஆண்டவருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார், பிரயாசத்தைக் கைவிடாதே     காலையில் உன் விதையை விதை மாலையிலே உன் கையை நெகிழவிடாதே அதுவோ இதுவோ எது வாய்க்குமோ என்றும் இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்று நீ அறியாயே.  ஆண்டவருக்குச் சித்தமானது அவர் கரத்தினால் வாய்க்கும்.

பரிசுத்த வேதாகமத்தில் எஸ்தரின் சரித்திர புத்தகத்தில் எஸ்தர் என்ற ஸ்திரீயைக் குறித்து கூறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  அவள் ஒரு யூத ஸ்திரீ, அவளுக்குத் தாய் தகப்பன் இல்லை. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்; எருசலேமிலிருந்து பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாகிய மொர்தேகாய் என்பவனுடைய சிறிய தகப்பன் குமாரத்தி தான் இந்த எஸ்தர்.  அவள் தாயும், தகப்பனும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவனை தன் குமாரத்தியாக எடுத்துக் கொண்டான்.  இந்த மொர்தேகாய் தான் எஸ்தரை வளர்த்தான.; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவன் சொற்கேட்டு வளர்ந்தாள்.


    இந்தநாட்களில் நூற்றிருபத்தேழு நாடுகளை அகாஸ்வேரு என்னும் ராஜா ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியாகிய ராஜ ஸ்திரீயாகிய வஸ்தி மகா ரூபவதியாயிருந்தாள். ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியை தனக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது ராஜாவின் விருப்பத்துக்கும் கட்டளைக்கும் கீழ்படியாமற் போனதினால் அவளுடைய ராஜ மேன்மையை அவளைப் பார்;க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு கொடுக்கும் தீர்மானம் உண்டானது.


    இந்நிலையில் அகாஸ்வேரு ராஜா எஸ்தர்மேல் அன்பு வைத்தான்.  அவளுக்கு ராஜாவின் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது.  ஆகையால் ராஜ கிரீடத்தை அவள் சிரசின் மேல் வைத்து அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.  எஸ்தர் மொர்தெகாயிடம் வளர்ந்த போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்து வந்தாள்.


    அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறபோது வாசல் காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும், தேரேசும் வர்மம் வைத்து ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைபோட வகை தேடினார்கள்.  இந்தக் காரியம் மொர்தெகாய்க்கு தெரிய வந்ததினால் அவன் அதை ராஜஸ்திரீயாகிய எஸ்தருக்கு அறிவித்தான்.  எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்கும் சொன்னாள்.  அந்தக் காரியம் விசாரிக்கப்படும்போது, அது மெய்யென்று காணப்பட்டது.  ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப் போடப்பட்டார்கள்.


    இந்தக் காலகட்டத்தில்தான் ராஜாவாகிய அகாஸ்வேரு ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலுருக்கிற  சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்தி வைத்தான்.  ஆகையால் ராஜாவின் அரண்மனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்.  அவனுக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்பது ராஜா கட்டளை, ஆனாலும் மொர்தேகாய் அவனை வணங்கவில்லை நமஸ்கரிக்கவும் இல்லை மொர்தேகாய் ஒரு யூதன்.


    ஒரு உண்மை கிறிஸ்தவனை யூதனுக்கு ஒப்பிடலாம்.  ஒரு உண்மை கிறிஸ்தவன் யாவரையும் கனம் பண்ணுவானே தவிர தலை வணங்கமாட்டான்.  இன்றைய சமூகத்தில் உயர்ந்த ஜாதிக்காரன் என்றும் பணம், பதவி என்கிற ஆணவத்தாலும் தலைவணங்க நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள் அல்லது தாங்களாகவே முகங்குப்புற விழுந்து வணங்குகிறார்கள் ஒரு உண்மை கிறிஸ்தவன் ஜாதியின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்றவனல்ல மனமாற்றத்தின் அடிப்படையில் கிறிஸ்தவன் என்ற அங்கீகாரம் பெறுகிறான்.  உலகமோ, சமூகமோ அங்கீகரிக்கவில்லை என்று அவன் கவலைப்படுவதில்லை தேவனும் பரலோக அரசாங்கமும் அவனை அங்கீகரித்துவிட்டது.  இப்படிப்பட்டவனுடைய புகழ்ச்சி மனு~ராலே அல்ல தேவனாலே உண்டாயிருக்கிறது என பரிசுத்த வேதம் கூறுகிறது ரோமர் 2:28,29;.


    கிறிஸ்துவுக்குள் யூதனென்றுமில்லை, கிரேக்கனென்றுமில்லை ஒரு யூத குலத்தவனானாலும், புறம்பாக (அதாவது சமூக அடிப்படையில்) யூதனானவன் யூதனல்ல உள்ளத்தில் உண்டான மனமாற்றத்தின் அடிப்படையில் உள்ளத்தில் யூதனானவனே யூதன்.  இங்கே ஜாதி வேற்றுமை ஒழிகிறது, தீண்டாமை ஒழிகிறது. கிறிஸ்தவனே இப்படிப்பட்ட மனமாற்றத்தை நீ பெற்றிருக்கிறாயா? அல்லது மதமாற்றம் என்ற நிலையில் கிறிஸ்தவ மதக்காரனாகி ஜாதி வெறிப்பிடித்தவனாயிருக்கிறாயா? ஆண்டவர் உண்டாக்கும்போது ஆணும், பெண்ணுமாக உண்டாக்கினாரே தவிர பல ஜாதிக்காரர்களாக உண்டாக்கவில்லை நாம் ஜாதியை மேன்மைப்பாராட்டி மதங்களை மேன்மைப்படுத்திக் கலகக்காரர்களாயிராமல் சமாதானத்தை நாடுவோம்.  மதத்தை சார்ந்த கிறிஸ்தவனல்ல, மனம் மாறின கிறிஸ்தவன் தானும் உண்டு தன் கடமையும் உண்டு என்று வாழுகிறது மட்டுமல்ல யாவரோடும் சமாதானமாயிருக்கவும், யாவரையும் கனம் பண்ணவும் கற்றுக் கொள்கிறான்.  கிறிஸ்தவம் மதங்களுக்கு அப்பாற்பட்டது கிறிஸ்தவன் ஜாதி வெறிக்கு அப்பாற்பட்டவன் அவன் கலகக்காரனல்ல. கலகக்காரனானால் நீ ஒரு உண்மையாண கிறிஸ்தவனல்ல.


    ஒரு யூதன் சிறுவயதிலிருந்தே வேத பிரமாணங்களில் போதிக்கப்பட்டு கற்பனைகளை அறிந்திருப்பவன் மொர்தேகாய் வேத பிரமாணங்களை நன்றாய் அறிந்திருந்தான்.  மட்டுமல்ல அவைகளைக் கைக்கொள்வதிலும் முனைப்பாயிருந்தான். பிரமாணம் என்ன சொல்லுகிறது கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம்.


    என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும், பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.  நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில வந்து உன்னை ஆசீர்வதிப்பேன். என ஆண்டவர் பேசி சொல்லிய வார்த்தைகள் இவைகளே.  யாத்திரையாகமம் 20 அதிகாரம்.  இவைகளை மொர்தேகாய் அறிந்திருந்த படியினால்தான் ராஜாவின் கட்டளை என்றும் பாராமல் தேவ கட்டளைக்கு தலைவணங்கி ஆமானை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.  ஒரு உண்மை கிறிஸ்தவன் உள்ளத்திலே பணிவும், பிரமாணத்திலே தலைநிமிர்ந்தும் வாழுபவன். சத்தியத்துக்காக செத்தாலும் சாவானே தவிர பணத்துக்காகவோ, பதவிகளுக்காகவோ விலைமதிப்பற்ற இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ, பின்வாங்கவோ மாட்டான்.


    ஆமான,; மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது மூர்க்கம் நிறைந்தவனானான். மொர்தேகாய் ஒரு யூதனென்றும், அவன் ஜனங்களும் யூத ஜனமென்றும் ஆமானுக்கு அறிவிக்கப்பட்ட போது, அகாஸ்வோரு ராஜா ராஜ்யபாரம் பண்ணுகிற நூற்றிருப்பத்தேழு நாடுகளிலுள்ள யூதரையெல்லாம் சங்கரிக்க வகை தேடினான்.  யூதர்களைக் குறித்த குற்றச்சாட்டு என்ன வென்றால் உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே


    “ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்”


“அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும்                      
 விகற்பமாயிருக்கிறது”
    
“அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக் கொள்ளுகிறதில்லை” 

ஆகையால் இவர்களை இப்படி விட்டிருக்கிறது நியாயமல்ல என கூறிவிட்டு, ராஜாவின் சம்மதத்தைப் பெற ராஜாவுக்கு பரிதானங்களை (லஞ்சம்) கொடுக்க முன்னுக்கு வருகிறான்.  யூதர்களை அழிக்கும்படிக்கு ராஜா அங்கீகாரம் வழங்கினால் அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டு வந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி காரியக்காரர் கையில் கொடு;ப்பேன் என்றான்.  பாருங்கள் லஞ்சம் ராஜ அரமனைக்குள்ளும் புகுந்து விளையாடுகிறது. நியாயத்தைப் புரட்ட நீதியைக் கொலை செய்ய இன்று எங்குப் பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் கஜானாக்கள் நிரம்புகின்றன.

பரிசுத்த வேதம் கூறுகிறதைப் பார்ப்போம்


    நியாயத்திலே முகத்தாட்சிணியம் நல்லதல்ல.  முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயம் செய்வான்.  ஆதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.  நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான் பரிதான பிரியனோ (லஞ்சபேர்வழியோ) அதைக் கவிழ்க்கிறான்.  ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலை பெற்றிருக்கும். ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே, சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.  நியயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாய் ஏற்படாதே.  உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.  அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைகளுக்குத் தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே (நீதிமொழிகள்).


    இங்கே பாருங்கள் ஆமான் ராஜாவின் கஜானாவிலே கெண்டு வந்து செலுத்த முற்பட்டபோது ராஜா அதை வாங்கவில்லை.  ராஜா ஆமானை நோக்கி அந்த வெள்ளியை நீ வைத்துக் கொள், ஆயினும் நீ கேட்டபடி அந்த ஜனத்துக்கு உன் இ~;டபடி செய்யலாம் என்றான்.  ஆமான் உடனே தன் காரியத்தை செய்ய துவங்கினான்.  ஒரே நாளிலே சிறியோர், பெரியோர், குழந்தைகள், ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது அந்தக் கட்டளையின் நகல் ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம் பண்ணப்பட்டது.  சூசான் அரண்மனையிலுள்ள யூதர்களுக்கும் கட்டளை பிறந்தது.  இப்பொழுது ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்.  சூசான் நகரமோ கலங்கிற்று.


    துஷ்ட ஆமானுடன் சேர்ந்த ராஜாவின் கதி என்னவாயிற்று பாருங்கள்.  து~;டர் நியாயத்தை அறியார்கள் துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது ராஜாவின் முன்னின்று து~;டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும் (நீதிமொழிகள்).  இங்கே பாருங்கள் குடிகார ராஜா, குடிகார அதிகாரி என இருவரும் உட்கார்ந்தார்கள் எஸ்தர் 3:15.  இவர்களுடைய குடிபோதை தெளிவதற்குள் சூசான் நகரம்முழுவதும் அழுகையும், புலம்பலுமாகிவிடும்.  இவர்கள் போதை மயக்கம் தெளிவதற்குள் ஆயிரங்கள் செத்து மடிந்து போகுமே. ஐயோ! நம்முடைய தேசமும், பட்டணமும், கிராமமும், குடும்பங்களும் குடிகாரர்களுடைய நிர்வாகத்துக்குள் சென்றுவிட்டால் நிலைமை என்னவாகும்.


    என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து உன் இருதயத்தை நல் வழியிலே நடத்து.  மதுபான பிரியரையும், மாமிசப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.  குடியனும் போஜனப் பிரியனும் தரித்திரராவார்கள் (நீதிமொழிகள்).
    ஆம், மதுபானத்தினால் வரும் சம்பாத்தியத்தினால் லாபம் கிடைக்கப் பெற்றாலும் அது சாபமே. அநேகருடைய மரண ஓலத்தின் கண்ணீர் துளிகளே. அது தேசத்துக்குத் தரித்திரத்தைத் தான் கொண்டுவரும்.  குடும்பங்களில் பட்டினி ஓலங்கள் கேட்கப்பண்ணும்.


    ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாதக் காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?


    மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரித்திருப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந் தானே.  மதுபானம் இரத்தவர்ணமாயிருந்து,  பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும் போது, நீ அதைப் பாராதே, அது மெதுவாய் இறங்கும்.  முடிவிலே பாம்பை;போலக் கடிக்கும்.  விரியனைப்போலத் தீண்டும்.  உன் கண்கள் விபச்சார ஸ்திரீயை நோக்கும்.  உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும், என்னை அடித்தார்கள் எனக்கு நோகவில்லை, என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை நான் அதைப்பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய் (நீதிமொழிகள் 23:29-35) மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல, மதுபானம் பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்பட்டவர்களுடைய நியாயத்தைப் புரட்டுவார்கள் (நீதிமொழிகள்)

    மொர்தெகாய் நடந்த யாவற்றையும் அறிந்ததும் தன் வஸ்திரத்தைக் கிழித்து இரட்டுடுத்தி சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய் துயரமுள்ள மகாசத்தத்துடனே அலறிக்கொண்டு ராஜாவின் அரமணை வாசல் முகப்புமட்டும் வந்தான்.  இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமணை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.  ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே துக்கமும், உபவாசமும் அழுகையும், புலம்பலும் உண்டாகி அனேகர் இரட்டுடுத்தி சாம்பலில் கிடந்தார்கள் ஜனங்கள் தங்களுக்கு உண்டான இந்த இக்கட்டான நிலையில் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேறு வழி தெரியவில்லை.  தன் ஜனங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டிலகர் அவர்களைத்தப்புவிக்க மொர்தெகாயும் துக்கத்தை வெளிப்படுத்த இந்த வழிகளைத்தான் தேடினான்.


    இந்நிலையில் ராஜமேன்மையில் இருக்கக்கூடிய ராஜாத்தியாகிய எஸ்தர் மனங்கொண்டால் மட்டுமே யூதஜனங்களை அழிவிலிருந்து காக்கமுடியும்.  ஆனால் ராஜமேன்மையிலிருக்கிற எஸ்தருக்கு எந்தக்கரியமும் தெரியாமலிருந்தது. எஸ்தரின் தாதிமார்கள் மூலம் யாவும் தெரியவந்தபோது எஸ்தர் ராஜாதித்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த இரட்டு வஸ்திரத்தை எடுத்துப்போட்டு உடுத்திக்கொள்ள வேறு வஸ்திரத்தை கொடுத்து அனுப்பினாள்.  மொர்தெகாயோ அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.  இதுதான் தன் ஜனத்தின்மேல் வைத்துள்ள உண்மையான அன்பு.  தன் சேமத்தை மட்டும் பாராமல் ஜனத்துக்காக தன்னை அருவருத்துக் கொண்டு துயரத்தோடு காணப்பட்டான்.  இதுதான் ஜனத்தின் மேலுள்ள உண்மையான ஆத்துமபாரம்.  ஜனங்கள் பாவத்திலும் அக்கிரமத்திலும் பல ஆயிரங்கள் அனுதினமும் செத்து மடிந்து கொண்டிருக்கும்பொது உன் ராஜமேன்மை சுகபோகமாய் வாழுவதற்கல்ல.  சுகபோகமாய் வாழுகிறவள் உயிரோடு செத்தனவள்.


    மேலும் இதன் முகாந்திரம் என்ன என்று அறியும்படி தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த ஆத்தாகை அழைப்பித்து மொர்தெகாயிடம் விசாரிக்க எஸ்தர் கட்டளையிட்டாள்.  மொர்தெகாய் தனக்கு சம்பவித்த எல்லாவறிறைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி திட்டமிட்ட ஆமானின் சதியையும், யூதருக்கு நேர்ந்துள்ள இக்கட்டான நிலையையும் எடுத்துக் கூறியதோடு: தன் ஜனங்களுக்காக ராஜாவிடம்போய் விண்ணப்பம்பண்ணவும், மன்றாடவும் வேண்டுமென்று எஸ்தருக்கு சொல்ச்சொன்னவைகள் யாவையும் ஆத்தாகு எஸ்தருக்கு அறிவித்தான்.
    ஆயினும் எஸ்தருக்கு இப்போது உண்டான இக்கட்டான சூழ்நிலைமையைப் பாருங்கள்: முப்பது நாள்வரை ராஜாவிடத்தில் எஸ்தர் அழைக்கப்படவில்லை. அழைக்கப்படாமல் யாராவது உள் முற்றத்தில்; ராஜாவிடம் பிரவேசித்தால் அவர்கள் பிழைக்கும்படிக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றபடி சாவேண்டும் என்பதாய் தவறாத சட்டமுண்டு என்பதை மொர்தெகாய்க்குச் சொல்லச் சொன்னாள். 

 எஸ்தரின் மனநிலையைச் சிந்தித்துப் பாருங்கள்.  இப்படித்தான் இன்னும் அனேகருடைய நிலை. இச்சூழ்நிலையில் தன்ஜீவனா? ஜனத்தின் ஜீவனா? எது பிரதானம்.  அற்பணிப்பில்லாதவர்களைக்கொண்டு எழுப்புதல் வருவதில்லை.  ஜனம் அழிவிலிருந்து காக்கப்படுவதில்லை.


    இயேசு கிறிஸ்து தேவனாயிருந்தும், மனுக்குல்தை பாவத்திலிருந்தும் நித்திய அழிவிலிருந்தும் காப்பாற்ற மாமிச சாயலில் தோன்றி, முப்பத்து மூன்றரை வருடங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து அதிலும் மூன்றரை வருடங்களாக ஜனங்கள் மத்தியில் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து தான் தேவ குமாரன் என வெளிப்படுத்தினார்.  அனேகர் அவரை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கௌ;ளத் தகுதியானார்கள்


    மேலும் கடைசி மட்டுமுள்ள மனுக்குலத்துக்கும் மீட்பு உண்டாகும்படி எல்லாருக்காகவும் தான் மரிக்கமுன்வந்தார்,  மரணவியாகுலமடைந்து ஜெபம்பண்ணினார், எல்லா மனுக்குலத்தின் பாவத்துக்காக தண்டனையான மரண தீர்ப்பாகிய ஆக்கினையைத் தாமே ஏற்றுக்கொண்டு சிலுவைமரத்தில் தொங்கி மரித்தார்.  இப்போது மனுக்குலத்தின் மீட்புக்கான கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது.  இயேசு கிறிஸ்து தேவகுமாரனாயிருந்தபடியால் மரணத்தின் கட்டை அவிழ்த்து உயிரோடு எழுப்பப்பட்டு பரமேறிச்சென்றார்.  இந்த பரிகாரத்தை ஏற்றுக்கெண்டு உயிர்த்தெழுந்த தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு நிதியஜீவன் உண்டு.  அவர்கள் நித்திய மரணத்துக்குநீங்கி நித்திய வாழ்வைப் பெறுவார்கள்.  இதுதான் இயேசு கிறிஸ்துவின் அன்பு.  ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் மேலான அன்பு ஒன்றுமில்லை. இந்த அன்பின் தியாகம்தான் நம்முடைய முழுஅர்பணிப்புக்கு காரணமாக அமைகிறது.


    இந்தத் தியாக அன்புதான் தன் ஜனத்துக்காக மொர்தெகாயை வியாகுலப்படவைத்தது.  ஆனால் எஸ்தருக்கோ ராஜமேன்மையானது அவளது கண்களைக் குருடாக்கினது.  எஸ்தர் இப்போது ராஜஅரமணையில் இருப்பதாலும், தனக்கு ராஜ மேன்மைக் கிடைத்ததாலும் ராஜஅரமணைச் சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள்.  அதே வேளையில் தன் இனத்தாராகிய யூதஜனம்முழுவதும் அழிக்கப்படப்போகிறதைக் குறித்து முக்கியத்துவம் தெரியாமல்போயிற்று.  எஸ்தர் தன் ராஜமேன்மையை யூதஜனங்களின் மீட்புக்காய் பயன்படுத்தும் நல்லவாய்ப்பாக இருந்தும் சட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரிய வாய்ப்பை தவறவிடுகிறதைக் காணமுடிகிறது.  ஆனாலும் மொர்;தெகாய் விட்டுவிடவில்லை. 
    எஸ்தருக்குச் சொல்லி அனுப்பிய காரியம் என்னத் தெரியுமா? நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலருந்து எழும்பும் அப்பொழுது நீயும் உன்தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்.
    நீ இப்படிப்பட்டக் காலத்ததுக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே யாருக்குத் தெரியும் என்றான்


    ஆம் பிரியமானவர்களே இந்த காலத்தில் நாம் மவுனமாயிருந்தால் தேசத்தின் மனுகுலத்தின் இரட்சிப்பு தடைபடுவதில்லை.  விண்ணப்பம் பண்ணுகிறனில்லை என்று கண்டு தேவனுடைய புயமே இரட்சிப்பாயிற்று என வேதம் கூறுகிறது.  தேவன் எதிர்ப்பார்ப்பது நானும் நீங்களும் கிடைத்த இரட்சிப்பை ராஜமேன்மையாய் எண்ணி ராஜ போஜனம் உண்டு சுகபோகமாய் வாழ்வதல்ல.  ஜனங்களுக்காய் தியாக அன்பின் அற்பணிப்போடு ஜெபிக்கவும், இரட்சிப்பை பிரசித்தப்படுத்தும் ஊழியத்தை செய்யவும் வேண்டுமென்று விரும்புகிறார்.


    மெர்தெகாயின் வார்;தைகளைக்கேட்ட எஸ்தர் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் இரவும்பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து தனக்காக உபவாசம் பண்ணும்படிச் சொன்னது மாத்திரமல்ல தானும் உபவாசம் பண்ணுவதாகவும், சட்டத்தை மீறி ராஜாவிடம் பிரவேசிப்பேன்  நான் செத்தாலும் சாகிறேன்  என சொல்லி அனுப்பினாள்.  இந்த நாட்களில் உபவாச ஜெபம் என கூடி ஜெபிக்கிற நோக்கம் எதுவாயிருக்கிறது.  நல்ல நோக்கத்தின்படியான உபவாசம் எஸ்தருக்கு அற்பணிப்புக்கான தைரியத்தைக் கொடுத்தது.  எஸ்தர் தன் தீர்மானத்தை உறுதியாக்கிக்கொண்டு ராஜ சமூகத்தில் சென்றாள், ராஜாவின் தயவையும் பெற்றாள்.
    ராஜா எஸ்தரைப்பாத்து உன் வேண்டுதலென்ன? அது உனக்குக் கொடுக்கப்படும் உன் மன்றாட்டு என்ன?  ராஜ்யத்தின் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றபோது எஸ்தரோ ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என்வேண்டுதலுக்கு என் ஜீவனும் என்மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடுவீராக என்றாள்.  ராஜா எஸ்தரின் வேண்டுதலின்படியும் மன்றாட்டின்படியும் செய்தான்.  எஸ்தர் தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டபடியால் யூதஜனங்கள் யாவரும் அழியாதபடி காக்கப்பட்டார்கள்.
    இயேசு கிறிஸ்து சொன்னார்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.  நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
    நானே நால்லமேய்ப்பன்: நால்லமேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:10,11