Smart Tenkasi

உங்களை உங்களுக்குத் தெரியுமா?

நம்மால் தெரிந்துக்கொள்ள முடியாத புரியாத புதிர்களான பல காரியங்கள் உள்ளன.  அவைகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.


    இல்லாமை என்ற ஒன்றில்தான் எல்லாம் உண்டாக்கப்பட்டது.  வெற்றிடத்தைத்தான் உண்டாக்கப்பட்ட யாவும் நிரப்பியுள்ளது.  இந்த வெற்றிடம் தானாய் தன்னை நிரப்பிக்கொண்டனவா?  இவ்வளவு ஒழுங்காய் அழகாய் தன்னை ஆக்கிக் கொண்டனவா? இவையெல்லாம் எப்படி ஆயிற்று?


    கண்டுபிடிக்கப்படாத புதிர்களான இவைகளைத் தெரிந்துகொள்ள உண்டாக்கப்பட்ட மனிதன் தன் மூளை அறிவினாலே அறிந்துக் கொள்ள பல வழிகளையும், உத்திகளையும் கையாளுகிறான்.  இவன் தன்னையே அறிந்துகொள்ள முடியாதவன். தன்னையே தெரிந்து கொள்ளமுடியாதவன், வேறு எதைத் தெரிந்துக் கொள்ளப்போகிறான்.


    எல்லாம் உண்டாக்கப்பட்ட பிறகுதான் மனிதன் உண்டாக்கப்பட்டான்.  மனிதனுக்கென்றுதான் எல்லாம் உண்டாக்கப்பட்டன.  மனிதன் தானாய் உண்டானவனுமல்ல, உண்டாக்கப்பட்ட எதிலிருந்தும் உண்டானவனுமல்ல.  குறைந்த அறிவுள்ள ஜீவராசிகளிலிருந்து மனிதன் உண்டாயிருந்தானானால் அவனும் அந்த ஜீவராசிகளுக்கு ஒப்பானவனாய்தான் இருக்க முடியும்.  ஆனால் மனிதனோ எல்லா ஜீவராசிகளைப்பார்க்கிலும் விசேஷமானவன்.


    பரிணாமக் கொள்கைப்படி, மனிதன் குரங்கிலிருந்து தோன்றினவனல்ல.  பரிணாமக் கொள்கையுடைவர்கள் மனித இனத்தவர்களாய் இருக்கவாய்ப்பில்லை. அவர்கள் ஒரு ஜீவராசிகளைப் போலதான் இருக்கமுடியும்.  தங்கள் ஆதிமூதாதையர் குரங்கு இனத்தவர்கள் என்று எண்ணும்போது அந்தக் கொள்கையுடையவர்கள் தங்களுக்குள் வெட்கப்படுகிறார்கள்.  இன்றைக்கும் குரங்குஇனம் உலகில் பலவகை வாழுகின்றன.  ஆவைகளெல்லாம் மனிதர்களை உறவு சொல்லி அழைத்தால் என்னவாகும்.


    மனிதன் மனிதனாய்த்தன்னைப் பார்க்கவேண்டும்.  எந்த ஜீவன்களுக்கும் ஆத்துமா என்று ஒன்று இருந்ததில்லை.  மனிதன்தான் ஆத்துமா என்கிற ஜீவனையுடைய பூரண அறிவுள்ளவனாய் உண்டாக்கப்பட்டவன்.  ஆவன்தான் ஜீவ ஆத்துமாவானவன்.  அவனே பூரணமான மனிதன். அவனைக்குறித்து ஆதித்தகப்பன் பாவம் செய்தான் என டீஐடீடுநு ல் கூறப்பட்டுள்ளது (ஏசாயா43:27).  பாவம் செய்தபோது மனிதன் பூரண அறிவை இழந்துவிட்டான்.  இந்த மனிதன் முதலாவது தன்னை உண்டாக்கினவரை அறிகிற பூரண அறிவை பெற்றுக்கொள்ளவேண்டும். 


    இந்த பூரண அறிவும் மற்றும் சகல பரிபூரணமும், மனிதனுக்காய் மனித சரீரத்தோடு இந்த உலகத்தில் தோன்றி, ஆதிதகப்பனுடைய பாவத்தினால் தோன்றின முழு மனுக்குலத்தின் பாவத்துக்காயும் தண்டனையாகிய மரணத்தை ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது.  மனிதன் தன்னை உண்டாக்கின தேவனை அறிந்துகொள்ள இந்த இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை அறிகிற அறிவுக்குள் வரும்போது, அவராலே அபிஷேகம் பெற்று சகலவற்றையும் அறிந்து கொள்ளமுடியும் என டீஐடீடுநுல் சத்தியம் கூறுகிறது.  சகலவற்றையும் அறிந்துகொள்ளுகிற ஞானம் அறிவு என்கிற பொக்கிஷம் மனிதனுக்குள் இருக்குமானால் மனிதன் தன்னை அறிந்தவனாய்தான் இருக்கமுடியும்.  பாவம் செய்கிற எவனும் தேவனைக் காணவுமில்லை அவரை அறியவுமில்லை என டீஐடீடுநுல் கூறப்பட்டுள்ளது (1 யோவான் 3:6).


    இல்லாமை என்ற வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்ததானால் இவ்வளவு பரந்து விரிந்திருக்கிற வானம் என்கிற ஆகாய விரிவைக் கண்டிருக்க முடியாது.  ஆந்த ஆகாயவிரிவில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய சுடர்கள் தோன்றியிருக்காது. இவைகளெல்லாம் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்கத்தக்கதாகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் வானம் என்கிற ஆகாயவிரிவிலே காணப்படுகின்றன.  இவ்வளவு அழகான வானமும், பூமியும், சகல ஜீவன்களும், காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளுமாகிய யாவும் தானாய் தோன்றினவைகளல்ல.  காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், யாவும் மாறிப்போகக்கூடியவை உருவழிந்துப் போகக்கூடியவை.  காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.


    காணப்படுகிறவைகளாகிய அநித்தியமானவைகளைக் கண்டுகொள்ளவும், அறிந்துகொள்ளவும் பூரண அறிவை இழந்தமனிதன் தன்குறைந்த அறிவினால் இவ்வளவு காலமாய் முயற்சித்தும் எந்த முடிவும் எட்டவில்லை.  அநேகக் கண்டுபிடிப்புகளை கண்டிருந்தாலும் அனேகக்காரியங்கள் எட்டாக்கனிகளாய்த்தான் உள்ளது. எட்டி எட்டிப்பார்த்துவிட்டு எட்டாத உடன் எட்டாகனி புளிக்கும் என்றதாம் நரி. அப்படித்தான் மனிதனுக்கும் எட்டாக்கனியாகத் தெரிந்துகொள்ளமுடியாத புதிர்களாய் அநேகக் காரியங்கள் உள்ளன.


    காணப்படாத நித்தியத்தைக்குறித்த எந்த சிந்தையும் உணர்வும் இல்லாதவனாகிய மனிதன் தன்னைக்குறித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவனாயும் காணப்படுகிறான்.  காணப்படாதவைகளைக் காணவும், அறிந்துகொள்ளவும், தெரிந்துக்கொள்ள முயற்சிக்காதவனாயும் காணப்படுகின்றான். ஏதோ அறிந்து கொண்டவைகளில் மகிழவும், தன்னைப் பெருமைப்பாராட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். காணப் படாதவைகளாகிய நித்தியத்தைக்குறித்த எந்த நோக்கமும் இல்லாத குறுகிய சிந்தையுள்ள, குறைந்த அறிவுள்ளவார்களாகக் காணப்படுகிற மனிதர்கள்தான் இன்று ஒரு மேதையாய், ஞானியாய் காணப்படுகிறார்கள்.  இவர்கள் ஞானமெல்லாம் மூழ்கிப்போகும் காலம் நெருங்குகிறது.


    மேலும் காணப்படுகிறவைகளைத் தெரிந்துகொள்ள அற்பணித்துள்ள காலமும் பணமும் வீணாகி முடிவில் ஏமாற்றமடையப் போகிறார்கள்.  தன்னைத் தெரிந்துகொள்ள முயற்சிக்காத மனிதன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மறைவிடம் நோக்கி ஓடும் நாள் விரைவில் வரப்போகிறது.  அதின் வெளிப்பாடாகத்தான் பூமிக்கடியில் வீடுகட்டவும், நகரத்தை எழுப்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.  மாத்திரமல்ல ஆகாயமண்டலங்களிலும், கிரகங்களிலும் குடியிருப்புகளைத்தேட ஆரம்பித்துவிட்டார்கள்.  எதிலும் மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது.  வானம் என்பது எதுவரை இருக்கப்போகிறது அதின் உயரம் என்ன? பூமியின் கீழே ஆழம் எதுவரைப்போகிறது அதின் முடிவு என்ன? சமுத்திரத்தின் நிலைப்பாடு என்ன? எதுவுமே புரியவில்லை.  ஆனால் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது.  மனிதன் விளங்கிக்கொள்ளத்தான் முடியவில்லை.


    கேள்விகளோடு காணப்படுகிற இவையாவற்றிற்குமான விடை டீஐடீஐடுநுல் காணப்படுகிறது.  ஆனால் மனிதனோ அதை விசுவாசிக்கிறதில்லை.  பரிசுத்த வேதாகமம் கிறிஸ்தவர்களுக்கென்று அருளப்பட்டதல்ல.  எல்லா மனிதனுக்காகவும் அருளப்பட்டதுதான் டீஐடீடுநு.  ஆரம்பத்தைக்குறித்தும், முடிவைக்குறித்தும் தெளிவாய் கூறப்பட்டுள்ளது.  அநேகக் கண்டுபிடிப்புகள் வேத ஆதாரத்திலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டீஐடீடுநுல் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.  தன்னையும் தெரிந்துகொள்ளலாம்.


    மனித சரித்திரத்திலேயே மிகப்பெரிய விஞ்ஞானி என்று கருதப்பட்ட “ஐசக் நியூட்டன்” தன் வாழ்வின் இறுதியில் “நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன் இங்கே ஒரு கூழாங்கல் அங்கே ஒரு அழகான சங்கு என்று கண்டுபிடித்து பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கையில் எதிரே உண்மை என்ற மாபெரும் சமுத்திரம் இன்னும் கண்டறியப்படாமல் பரவிக்கிடக்கிறது” என்றார்.


    இல்லாமை என்ற ஒன்றில்தான் எல்லாம் உண்டானது.  வெற்றிடத்தைதான் யாவும் நிரப்பியுள்ளது.  இந்த வெற்றிடம்தானாய் நிரம்பவில்லை.  அப்படியானால் வெற்றிடத்தை நிரப்பினது யார்?
    இருக்கிவராகவே இருக்கிறேன் என்றவர்தான்.  அவர் தான்; ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்றார்.  நாள் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன் என்றார் ஏசாயா43:13 (டீஐடீடுநு). இல்லாமையிலிருந்து உருவாக்குகிறவர் என்று டீஐடீடுநுல் அவரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது.


    இந்த தெய்வத்தை மனிதன் தெரிந்துகொள்ள முற்படும்போதுதான் தன்னையும் அவன் தெரிந்து கொள்ள முடியும்.  பரிசுத்த வேதாகமத்தில் தெய்வம் ஒருவர் உண்டென்றும் தானும் அவரால் உண்டாக்கப்பட்டவனென்றும் எல்லாம் அவரால் உணடானது என்ற அறிவோடும் விசுவாசத்தோடும் தெய்வத்தை தேட ஆரம்பிக்கும் போதுதான் தெய்வத்தைக் காணமுடியும்.


    தெய்வம் இல்லை என்கிறவன் மதிகேடன் என டீஐடீடுநுல் கூறப்பட்டுள்ளது. எவைகளையெல்லாமோ தேடித்தேடி காலத்தையும், வாழ்க்கையையும் வீனாக்கிக் கொள்ளாமல் தெய்வத்தைத் தேட ஆரம்பித்துவிடுங்கள்.
    தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்குகிறார் (சங் 53:1-4).  இப்பொழுது உள்ளத்தில் உண்டாகிற உணர்வினால் தேவனைத்தேட ஆரம்பித்துவிடுங்கள்.  நிச்சயம் தெய்வத்தைக் கண்டுகொள்வீர்கள்.
    ஒரு நிமிடம் கண்களை மூடி தியானத்தோடு, முடிந்தால் முழங்காலில் நின்று பயபக்தியோடு
        நான் பாவிதான் ஆனாலும் நீர்
        மாசற்ற இரத்தம் சிந்தினீர்
        வாஎன்று என்னைக் கூப்பிட்டீர்
        என் மீட்பரே வந்தேன் வந்தேன் - என உள்ளத்திலிருந்து சொல்லுங்கள்.  தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் ஆண்டவர் சமீபமாயிருக்கிறார் (சங்கீதம் 115:18).


    நம்மை உண்டாக்கின ஆண்டவருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால் படியிடக்கடவோம் வாருங்கள்.