Smart Tenkasi

அமைதியான இரவு நேரங்கள்

அமைதியான இரவு நேரங்கள் சுகமானவை.  ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விடுங்கள், காற்று மெல்ல உங்களைத் தழுவவரும் அந்த நேரத்தில் நல்லபுத்தகங்களை, அதிலும் முக்கியமாக பரிசுத்த வேதத்தை எடுத்துப் புரட்டிப்பாருங்கள்.
    பரிசுத்த வேதத்தைக் குறித்து: என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவைகள்.  அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.  அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும் என நீதிமொழிகள் 8:8,9 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
    கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் ஆனால் நமக்கு இருக்கும் காலம் போதாது. எனினும் கிடைக்கிற நேரத்தை வீணடிக்காமல் நாள்தோறும் படிப்பது நமது கடமை.
    வரலாற்று நூல்களைப் படியுங்கள். அதற்காக மாத வருமானத்தில் ஒரு சிறு தொகையாவது புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவிடுங்கள்.  புத்தகம் வாங்குவது அறிவை வாங்குவதற்குச்சமம்.  படிக்கப் படிக்க சிந்தனைச் செழிக்கும், புத்தி தெளியும், புத்தி மயக்கம் நீங்கும்.  புதிய உத்வேகம் உண்டாகும்.  வாழ்வின் முன்னேற்றத்துக்கான வழிகள் திறக்கும்.
    புத்தகங்கள் வெறும் காகிதக்கட்டுகளல்ல, அவை அறிவுச் செல்வங்கள், ஞானவிளக்குகள்.
    நன்பனே: நல்ல புத்தகங்களை நேசி - அவை உன்னைப் 
புதுபிக்கும்.
    தினந்தோறும் வாசி – அது உன் உள்ளத்தை ஒளிர்விக்கும்.
    வேதத்தை நேசி – அது உனக்கு சமாதானத்தைக் கொடுக்கும்
    தினந்தோறும் வாசி – அது உனக்கு நித்திய ஜீவனைக் 
கொடுக்கும்.
    புத்தகங்களை வாசிக்க ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தையாவது ஒதுக்கவேண்டும்.  உண்ணுதல் உறங்குதல் எப்படி அவசியமானவையோ அப்படித்தான் புத்தகங்களை வாசித்து உட்கொள்ளுதலும்.
    நாள்தோறும் படிக்கிற பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் மூளை வளர்ச்சி சீராகஇருக்கும்.  சிலர் நிறையப் படிப்பார்கள் ஆனால் படித்தவைகளில் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். கற்றவைகளின்படி நடக்கவும் மாட்டார்கள்.  அவர்கள் ஓட்டைப் பானைப் போன்றவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் படிப்பதைவிட படிக்காமலிருப்பதே புண்ணியம்.
    “அறிந்திராதவைகளை அறிந்துகொள்வதில் ஆவல் வேண்டும்.” தினம் தினம் புதிய புதிய வி~யங்களை தெரிந்து கொள்வதில் தாகமிருக்க வேண்டும்.  புத்தகங்களை ரசித்துப் படித்து அவைகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.  நமக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நமக்குள் இருப்பவைகளின் அளவைப் பொறுத்ததே.  ஞானத்தை தினந்தோறும் தேடித்தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொண்ட ஞனத்தைப் பலரும் பயன்பெறும் வகையில் பகர்ந்தளிக்கவேண்டும்.
    கண்டதையும் கற்பவன் பண்டிதன் ஆவான் என்பார்கள், நாம் பண்டிதர் ஆகிறோமோ இல்லையோ: பல்வேறு நூல்களைப் படிக்கப்படிக்க மனதில் பக்குவம் அடைகிறோம்.  பல்துறை சார்ந்த நூல்களைப் படிக்கும்போது, இக்காலத்திய பிரச்சனைகள், பிரச்சனைகளுக்குத் தீர்வுகள், மாற்றங்கள், முன்னேற்றங்கள், வாய்புகள், வழிமுறைகள் என பலவற்றையும் நாம் தெரிந்துகௌ;ள முடியும்.
    நல்ல நல்ல நூல்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்வது மிகச்சிறந்த நண்பர்களை நம்முடன் நிரந்தரமாய்த் தக்கவைத்துக்கொள்வதைப் போன்றதாகும்.  நல்ல புத்தகம் என்பது நல்ல நண்பனாக மட்டுமின்றி நல்ல ஆசானாகவும் விளங்கும்.